×

முதல் ஓவரில் ஹாட்ரிக் 8 விக்கெட் வேட்டை! ஜெய ஜெய ஜெய்தேவ்

ராஜ்கோட்: டெல்லி அணியுடனான ரஞ்சி கோப்பை எலைட் பி பிரிவு லீக் ஆட்டத்தில், சவுராஷ்டிரா அணி கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தியதுடன் 8 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ‘சி’ ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த டெல்லி அணி உனத்கட் வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் 35 ஓவரில் 133 ரன் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்சை இழந்தது. ஷோரி, வைபவ், கேப்டன் யஷ் துல் ஆகியோர் உனத்கட் வீசிய முதல் ஓவரின் 3வது, 4வது, 5வது பந்தில் அடுத்தடுத்து டக் அவுட்டாகி அணிவகுத்தனர். படோனி (0), ஜான்டி (4), லலித் (0), லக்‌ஷய் (1) ஏமாற்றமளிக்க, டெல்லி 5 ஓவரில் 10 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து பரிதவித்தது.பிரான்ஷு – ஷோகீன் ஜோடி 8வது விக்கெட்டுக்கு 43 ரன், ஷோகீன் – வசிஷ்ட் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்தது டெல்லி அணி ஓரளவு கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. பிரான்ஷு 15 ரன், வசிஷ்ட் 38 ரன் எடுக்க, குல்திப் யாதவ் டக் அவுட்டானார். பொறுப்புடன் விளையாடி அரை சதம் அடித்த ஹ்ரிதிக் ஷோகீன் 68 ரன்னுடன் (90 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சவுராஷ்டிரா பந்துவீச்சில் உனத்கட் 12 ஓவரில் 1 மெய்டன் உள்பட 39 ரன் விட்டுக்கொடுத்து 8 விக்கெட் வீழ்த்தினார். ரஞ்சி வரலாற்றில் முதல் ஓவர் ஹாட்ரிக் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் வசமானது. சிராக், பிரேரக் தலா 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 184 ரன் எடுத்துள்ளது (46 ஓவர்). ஜெய் கோஹில் 34 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்விக் தேசாய் 104 ரன் (124 பந்து, 15 பவுண்டரி), சிராக் ஜனி 44 ரன்னுடன் களத்தில் உள்ளனர். தமிழகம் தடுமாற்றம்: பிராபோர்ன் ஸ்டேடியத்தில் மும்பைக்கு எதிராக நடக்கும் லீக் ஆட்டத்தில், தமிழகம் முதல் இன்னிங்சில் 144 ரன்னுக்கு சுருண்டது (36.2 ஓவர்). ஜெகதீசன் 23, பிரதோஷ் ரஞ்சன் 55, விஜய் ஷங்கர் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். மும்பை பந்துவீச்சில் தேஷ்பாண்டே 5, ஷாம்ஸ் 3, அவஸ்தி 1 விக்கெட் எடுத்தனர். முதல் நாள் முடிவில் மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன் எடுத்துள்ளது (41 ஓவர்). …

The post முதல் ஓவரில் ஹாட்ரிக் 8 விக்கெட் வேட்டை! ஜெய ஜெய ஜெய்தேவ் appeared first on Dinakaran.

Tags : Hattrick ,Jay Jay Jaidev ,Rajkot ,Ranji Cup Elite B division ,Delhi ,Saurashtra ,Jaidev Unathgat ,Jaya Jaya Jaydev ,Dinakaran ,
× RELATED கோட்டையாக கருதப்படும் குஜராத்திலேயே...