×

திருமூர்த்தி மலை பகுதியில் மழை: பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை

உடுமலை: திருமூர்த்தி மலை பகுதியில் மழை பெய்து வருவதால், அமணலிங்கேஸ்வரர் கோயில் மற்றும் பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல  தடை விதிக்கப்பட்டுள்ளது. உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை, திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் போன்ற சுற்றுலா தளங்களுக்கு கடந்த 2 வாரங்களாக ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. பக்தர்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய முப்பெரும் கடவுள்கள் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்யும் முன்பு பஞ்சலிங்க அருவியில் குளிக்க செல்கின்றனர். ஒரு சிலர் கோயில் முன்பு ஓடும் பாலாற்றிலேயே குளித்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கோயில் அருகே பக்தர்களின் வசதிக்காக கூடுதல் கழிப்பிடங்கள் செய்து தர வேண்டும், பஞ்சலிங்க அருவியில் குளித்துவிட்டு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருவியின் அருகிலேயே அடிப்படை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், திருமூர்த்தி மலை பகுதியில் மழை பெய்து வருவதால், நேற்றும், இன்றைக்கும் சுற்றுலா பயணிகள் பஞ்சலிங்க அருவிக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால், ஐயப்ப பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்….

The post திருமூர்த்தி மலை பகுதியில் மழை: பஞ்சலிங்க அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை appeared first on Dinakaran.

Tags : Thirumurthi Mountain ,Punjalinga Fall ,Udumalai ,Tirumurthi ,Amanalingeswarar Temple ,Tirumurthi Mountain Area ,Panchalinga Fall ,
× RELATED உடுமலை நகர திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு