×

கல்லூரிப் படிப்புடன், பகுதி நேர வேலைக்கும் சென்றபடி ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் மாணவர்கள்  

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் சிலர், மாலையில் பகுதி நேர வேலைக்கு சென்று அதில் வரும் வருமானத்தில் 4 ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இந்த இளைஞர்கள் குழுவில் ஹரிஷ் (20), மணி, அரவிந்தசாமி, கிருஷ்ணன் உட்பட 15 பேர் வரை உள்ளனர். இவர்கள் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் நேரத்தில் போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த சிறுவர்கள், காளைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்கும் பணிகளை செய்கின்றனர். இந்த காளைகளை ஜனவரி 16ம் தேதி நடக்க உள்ள பாலமேடு ஜல்லிக்கட்டில் களமிறக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக காளைகளுக்கு வாரத்தில் 3 நாட்கள் நீச்சல், நடை, ஓட்டம் மற்றும் உரிப்பாச்சுதல் உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். மேலும், காளைகளுக்கு நாள்தோறும் பச்சரிசி, மண்டை வெல்லம், பேரீச்சம்பழம், தேங்காய், பருத்தி, புண்ணாக்கு என வலுவான உணவுகளையும் வழங்கி வருகின்றனர். நண்பர்கள் மாறி, மாறி காளைகளை தங்கள் வீட்டில் வைத்து வளர்த்து வருகின்றனர். இவர்களில் சிலருக்கு ராணுவத்தில் சேர வேண்டுமென்ற எண்ணமும் உள்ளது. ஜல்லிக்கட்டு காளையை வளர்த்து வரும் ஹரிஷ் கூறுகையில், ‘‘காளை வளர்ப்பது என்பது எங்களது சிறு வயது கனவு. அதற்காக பகுதி நேர வேலைக்கு சென்று முதலில் 2 ஜல்லிக்கட்டு காளைகளை வாங்கினோம். அதற்கு பாண்டி, குட்டை என பெயர் வைத்து வளர்த்து வந்தோம். தற்போது கூடுதலாக 2 காளை வாங்கி வளர்த்து வருகிறோம். பிள்ளைகள் போல நாங்கள் வளர்க்கும் எங்கள் காளைகள் வாடிவாசல் வழியாக வருவதை காண மிகவும் ஆவலோடு உள்ளோம்’’ என்றார்.ஒரு நாள் செலவு ரூ.1,000: போடிநாயக்கன்பட்டியை சேர்ந்த மணி கூறுகையில், ‘‘4 காளைகளுக்கும் ஒரு நாளைக்கு குறைந்தது ரூ.1,000 வரை செலவாகிறது. இதற்காக பகுதி நேர வேலைக்கு சென்று, அதில் கிடைக்கும் வருவாய் மூலம் காளைகளை வளர்த்து வருகிறோம். முதன்முறையாக பாலமேடு ஜல்லிக்கட்டில் களமிறக்க போகிறோம்’’ என்றார்.* அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி கலெக்டரிடம் மனுமதுரை: பொங்கல் திருநாளையொட்டி மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜன. 17ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி கோரி, சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ வெங்கடேசன், அலங்காநல்லூர் நகர நிர்வாகிகள் கோவிந்தராஜ், ரகுபதி உள்ளிட்டோர் நேற்று மதுரை கலெக்டர் அனீஷ்சேகரிடம் மனு அளித்தனர். …

The post கல்லூரிப் படிப்புடன், பகுதி நேர வேலைக்கும் சென்றபடி ஜல்லிக்கட்டு காளைகளை வளர்க்கும் மாணவர்கள்   appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Vadipatti ,Bodhinayakanpatti ,Vadipatti, Madurai district ,
× RELATED சேலம் ஏரியில் தடை செய்யப்பட்ட ஆப்ரிக்கன் கெளுத்தி மீன்கள் சிக்கின