×

லாரி டிரைவரை மிரட்டி லஞ்சம் டிராபிக் போலீஸ் அடாவடி: வைரலாகும் வீடியோ

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் காய்கறி, பழம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை ஏற்றி வரும் லாரி டிரைவர்களை, டிராபிக்  இன்ஸ்பெக்டர் மிரட்டி  லஞ்சம் வாங்குவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோயம்பேடு மார்க்கெட் அருகே நேற்று முன்தினம் போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ சுந்தர்ராஜன் மற்றும் ஒரு போக்குவரத்து காவலர் வாகன  தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மணல் ஏற்றி வந்த லாரியை, அவர்கள் மடக்கினர். லாரி டிரைவரிடம் முறையான  ஆவணங்கள் இல்லாததால், அந்த லாரியை காவல் நிலையத்தில் கொண்டு விடும்படி அறிவுறுத்தினர். டிராபிக் போலீசாரிடம், டிரைவர் கெஞ்சவே,  1000 லஞ்சமாக கொடுக்கும்படி சிறப்பு எஸ்ஐ கூறுகிறார்.அப்போது, மணலுக்கு உரிய பில் உள்ளது என டிரைவர் கூறவே, அங்கிருந்த காவலரிடம் 500 கொடுத்துவிட்டு செல்லும்படி சிறப்பு எஸ்ஐ கூறுகிறார்.  இதைத் தொடர்ந்து டிரைவருக்கு வழி காட்டுவதுபோல், அந்த காவலரும் பணத்தை லஞ்சமாக பெற்றுக்கொண்டு லாரியை அனுப்பிவிடுகிறார்.  இக்காட்சிகளை ஒருவர் வீடியோவாக படம்பிடித்து பல்வேறு சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ வைரலாகப் பரவி  வருகிறது. இதுகுறித்து, போக்குவரத்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, கோயம்பேட்டில் வாகன தணிக்கையில்  ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்ஐ, தலைமை காவலர் ஆகியோரிடம் உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். லஞ்சம் வாங்கியது நிரூபணமானால்,  அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்….

The post லாரி டிரைவரை மிரட்டி லஞ்சம் டிராபிக் போலீஸ் அடாவடி: வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Lorry Driver ,Myriad Bribe ,Adavadi ,Annagar ,
× RELATED காலிஸ்தான் ஆதரவாளர்கள் அடாவடி...