×

கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழலில் தடுப்பூசி போட கோயம்பேடு வியாபாரிகள் தயக்கம்

அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட்டில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு,  கோவிட்-19 தடுப்பூசி  போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு வியாபாரிகள் மற்றும் கூலி தொழிலாளிகள் தயக்கம்  காட்டுகின்றனர். எனினும், பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். சென்னை மாநகரில், இரண்டாம் கட்டமாக, கொரோனா  நோய் தொற்று அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், சுகாதார துறையினர், மாநகராட்சியினர் இந்த நோய்  பரவலை தடுக்க, தீவிரமாக, பல்வேறு  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாக, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவலுக்கு முக்கிய மையமாக விளங்கிய கோயம்பேடு மார்க்கெட்டில் இந்த  தடுப்பூசி போடும் பணி வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை, கடந்த 11ம் தேதி, மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் துவக்கி வைத்தார்.  முன்னதாக, இங்கு கொரோனா தடுப்பூசி போடவும், சிகிச்சை அளிக்கவும் ஒரு மினி கிளினிக்கை அமைக்க வியாபாரிகளும் கூலித் தொழிலாளர்களும்  வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து அங்கு மினி கிளினிக்கை அமைத்து தடுப்பூசி போடும் பணி துவங்கியது. எனினும், இங்கு தடுப்பூசி போட்டுக்  கொள்வதில் வியாபாரிகளும் கூலித் தொழிலாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். இங்கு தடுப்பூசி போடும் பணி துவங்கியும், இன்றுவரை  குறைந்தளவு வியாபாரிகளும் கூலித் தொழிலாளர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டிருப்பதாக கூறப்படுகிறது. எனினும், தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும் பயன்களை அறிந்து, கோயம்பேடு மற்றும் நெற்குன்றம் பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட  பொதுமக்கள் நாள்தோறும் தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வதால் ஏற்படும்  நன்மைகள் குறித்து, சிஎம்டிஏ அதிகாரிகள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்….

The post கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கும் சூழலில் தடுப்பூசி போட கோயம்பேடு வியாபாரிகள் தயக்கம் appeared first on Dinakaran.

Tags : Coimbude ,Annagar ,Coimbadu ,Dinakaran ,
× RELATED காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய...