×

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது பெற்ற தமிழக பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டினார் டிஜிபி சைலேந்திர பாபு..!!

சென்னை: தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது பெற்ற தமிழக பெண் தலைமை காவலரை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார். திருநெல்வேலி மாவட்டம் குற்ற ஆவண காப்பகத்தில் பணிபுரியும் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு, கடந்த 15ம் தேதி டெல்லியில் நடைபெற்ற தேசிய குற்ற ஆவணக் காப்பக விழாவில் விருது வழங்கப்பட்டது. காணாமல் போனோர் வழக்குகளின் தரவை ஆராய்ந்து ஒப்பிட்டு அடையாளம் காணப்படாத 19 பேர் உடல்களை காவலர் தங்கமலர் மதி அடையாளம் கண்டுள்ளார். குற்ற ஆவணங்களை ஆராய்ந்து, பல்வேறு இடங்களில் காணாமல் போன 16 இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார். இந்நிலையில், தலைமை காவலர் தங்கமலர் மதியை டிஜிபி சைலேந்திர பாபு நேரில் அழைத்து பாராட்டினார். தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் குற்றம் மற்றும் குற்றவாளிகளை கண்காணிக்கும் சி.சி.டி.என்.எஸ். என்ற இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்கள், காணாமல் போனவர்கள், திருடு போன வாகனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு இந்த இணையதள வசதி ஏதுவாக உள்ளது. மேற்படி இந்த இணையதள பயன்பாடு குறித்து டெல்லியில் உள்ள தேசிய குற்ற ஆவண காப்பகம், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் மேற்படி சி.சி.டி.என்.எஸ். இணையதளத்தை அதிக அளவில் பயன்படுத்தி குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்தல், திருட்டு வாகனங்களை கண்டுபிடித்தல், காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல் உட்பட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழ்நாடு காவல்துறையின் பெண் தலைமை காவலர் தங்கமலர் மதிக்கு தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது வழங்கப்பட்டது….

The post தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் விருது பெற்ற தமிழக பெண் தலைமை காவலரை நேரில் அழைத்து பாராட்டினார் டிஜிபி சைலேந்திர பாபு..!! appeared first on Dinakaran.

Tags : DGP ,Shailendra Babu ,Tamil Nadu ,Chennai ,National Crime Records Archive ,Dinakaran ,
× RELATED ஜாமீனில் வெளியே வந்தும் குற்றம்...