×

நில அங்கீகாரம் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அதிகாரி கைது

சென்னை: நில அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி பதிவறை எழுத்தர் கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு  போலீசாரிடம் சிக்கினார். சென்னை கோடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் உமாபதி. இவருக்கு சொந்தமான நிலம் திருவள்ளூர் அடுத்த திருமழிசை  பேரூராட்சி பகுதியில் உள்ளது. இந்த நிலத்துக்கு அங்கீகாரம் பெறுவதற்காக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பேரூராட்சி அலுவலகத்தில்  விண்ணப்பம் செய்துள்ளார். அப்போது, அங்கு பணிபுரியும் பதிவறை எழுத்தரான வெங்கடேசன் (54), ரூ.15 ஆயிரம் கொடுத்தால் அனுமதி அளிப்பதாக  கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் ரூ.10 ஆயிரம் தருவதாக கூறிவிட்டு பணத்தைக் கொண்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். பின்னர்,  திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் கலைச்செல்வனிடம் உமாபதி புகார் செய்தார். அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு  போலீசார் ஆலோசனையின்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பி உள்ளனர். இந்நிலையில் நேற்று பிற்பகலில் பேரூராட்சி  பதிவறை எழுத்தரான வெங்கடேசனிடம் ரூ.10 ஆயிரத்தை உமாபதி கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர்  கார்த்திக் மற்றும் போலீசார் சுற்றி வளைத்து கையும் களவுமாக வெங்கடேசனை பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி  வருகின்றனர்….

The post நில அங்கீகாரம் வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பேரூராட்சி அதிகாரி கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Municipal Registry ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...