×

நவ. 9 முதல் டிச. 16ம் தேதி வரை 6,844 வழக்குகள் முடித்து வைப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி

புதுடெல்லி: நவ. 9ல் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற டி.ஒய்.சந்திரசூட், கடந்த 16ம் தேதி வரை நிலுவையில் இருந்த 6,844 வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த நவ. 9ம் தேதி டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றார். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை துரிதமாக முடித்து தீர்ப்புகளை வழங்க தலைமை நீதிபதி ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி கடந்த 16ம் தேதி நிலவரப்படி, 6,844 வழக்குகளை முடித்து வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதில் 1,163 ஜாமின் வழக்குகளும் அடங்கும். திருமண தகராறு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக 1,353 வழக்குகளையும் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. இதே காலகட்டத்தில் மொத்தம் 5,898 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக நவம்பர் 9ம் தேதி 277 வழக்குகளும், டிசம்பர் 12ம் தேதி 384 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் கூறுகையில், ‘ஜாமின் கோரும் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். ஒவ்வொரு நாளும் 10 ஜாமின் மனுக்கள் குறித்து விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். தனி மனித உரிமை என்பது அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட விலைமதிப்பற்ற மற்றும் மறுக்க முடியாத உரிமையாகும். அதுபோன்ற வழக்குகள் தாமதிக்கப்படுவது கடுமையான குற்றத்திற்கு வழிவகுக்கும்’ என்று பேசியது குறிப்பிடத்தக்கது….

The post நவ. 9 முதல் டிச. 16ம் தேதி வரை 6,844 வழக்குகள் முடித்து வைப்பு: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Nov. D.C. ,Justice ,Y. Chandrasute ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு