×

பளிச் சமையலறைக்கு 10 டிப்ஸ்

1. கிச்சனில் கரப்பான் ஆட்டம் காட்டுகின்றனவா? வெள்ளைப் பூண்டை நசுக்கி கிச்சன் எங்கும் போட்டு விடுங்கள். கரப்பான் டான்ஸ் குறைந்துவிடும். 2. சமையலறையில் எண்ணெய் சிந்திவிட்டால் அந்த இடத்தில் சிறிது அரிசி மாவு தூவி துடைத்தால் எண்ணெய்க்கறை நீங்கும். 3. சமையலறையில் இரவில் ஒரு சின்ன பல்ப் போட்டு வையுங்கள். பூச்சிகள் அண்டாது. 4. சமையலறையில் எறும்புகள் வராமலிருக்க வினிகருடன் தண்ணீர் கலந்து துடைக்கலாம். எறும்புகள் எட்டிப்பார்ப்பதை நிறுத்திவிடும். 5. கிச்சன் ஓரங்களில் வெங்காயத்தை நறுக்கி சிறுசிறு துண்டுகளாகப் போட்டு வைத்தால் விஷப் பூச்சிகள், கரப்பான்கள் வரத்து குறையும். 6. சமையலறை பலசரக்கு டப்பாக்களில் இருக்கும் கறைகள் நீங்க உப்பு கலந்த நீரில் துடைக்கலாம். 7. சிலிண்டர், கல்சட்டிகள் வைக்கும் இடங்களில் துருக்கறைகள் இருப்பதைக் காணலாம். அங்கே எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து துணியால் துடைத்தால் துருக்கறை நீங்கும். 8. சமையலறை மேடையை துடைக்கும் போது சிறிது வினிகர் சேர்த்து துடைத்தால் பூச்சிகள் அண்டாது. மேலும் பால் பொங்கிய கறைகள், குழம்பு கொட்டிய கறைகளும் வாடையின்றி போய்விடும். 9. டைனிங் டேபிளில் ஈக்கள் அட்டகாசம் செய்தால் அங்கே ஒரு கிண்ணத்தில் நீர் ஊற்றி புதினா மற்றும் சிறிது உப்பு சேர்த்து வைத்தால் ஈக்கள் குறையும். 10. சமையலறை சிங்கில் ஒரு சிறு கற்பூரக் கட்டிப் போட்டு வைத்தால் பூச்சிகள், துளை வழியாக வராமல் தடுக்கலாம். மேலும் அந்துருண்டையை விட கற்பூரம் கெமிக்கல் குறைவு. மேலும் இயற்கையான நறுமணமும் கொடுக்கும். தொகுப்பு : ஆர். ஜெயலெட்சுமி.

The post பளிச் சமையலறைக்கு 10 டிப்ஸ் appeared first on Dinakaran.

Tags :
× RELATED தேஜஸ்வி யாதவா? தேஜஸ்வி சூர்யாவா?.. பெயர்...