×

மிஸஸ் வேர்ல்ட் 2022… 21 வருடங்கள் கழித்து சாதனை படைத்தார் இந்தியப் பெண்!

திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டிகள் கடந்த 1984ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் அமெரிக்காவில் நடைபெற்றது. இதில் 63 நாடுகளை சேர்ந்த திருமணமான பெண்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற சர்கம் கவுஷல் பங்கேற்றார். அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இப்போட்டியின் இறுதிச் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய பெண் சர்கம் கவுஷல் முதலிடம் பெற்று பட்டத்தை வென்றார். தெற்கு பசிபிக் தீவு நாடான பாலினேஷியா சேர்ந்த பெண் 2-ம் இடத்தையும், கனடாவைச் சேர்ந்த பெண் 3-வது இடத்தையும் பெற்றனர்.இதற்கு முன்பு கடந்த 2001-ம் ஆண்டில் இந்தியாவை சேர்ந்த மருத்துவர் அதிதி, திருமதி உலக அழகி பட்டத்தை வென்றதுதான் கடைசி. மீண்டும் 21 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு இந்த பட்டம் சாத்தியப்பட்டிருக்கிறது. காஷ்மீரின் ஜம்மு பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கவுஷலின் மகள்தான் சர்கம் கவுஷல். கடந்த 2018ம் ஆண்டில் கடற்படை அதிகாரி ஆதித்யாவை திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு ஆசிரியையாகவும் பணியாற்றி உள்ளார். மேலும் என்னதான் குடும்பம், குழந்தை என்றாலும் தனது ஆரோக்கியம், உடல், என அனைத்திலும் கவனமாகவே இருந்து வரும் சர்கம் திருமணத்திற்குப் பின் பெண்கள் தங்களை பெரிதாக கவனிப்பதில்லை. எக்காலத்திலும் நாம் நம்மை நேசிப்பதையும், நம் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்வதையும் விடக் கூடாது என்கிறார் சர்கம் கவுஷல்….

The post மிஸஸ் வேர்ல்ட் 2022… 21 வருடங்கள் கழித்து சாதனை படைத்தார் இந்தியப் பெண்! appeared first on Dinakaran.

Tags : World Beauty Competitions for Married Women ,United States ,Dinakaran ,
× RELATED டிரெண்டாகும் டம்மி டைம்!