×

சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குப்பதேவன் ஊராட்சி மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.1.85 கோடி நலத்திட்ட உதவி-தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

பேராவூரணி : சேதுபாவாசத்திரம் ஒன்றியம், குப்பத்தேவன் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் ரூ. 1. 85 கோடிக்கு தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குப்பத்தேவன் ஊராட்சி கணேசபுரத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ அசோக்குமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தஞ்சாவூர் கலால் உதவி ஆணையரும், பட்டுக்கோட்டை ஆர்டிஓ (பொ) .பழனிவேல் வரவேற்றார்.முகாமில் 587 பயனாளிகளுக்கு, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 56 பயனாளிகளுக்கு, மாதாந்திர உதவித் தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஆணை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 380 பயனாளிகளுக்கு ரூ.36 லட்சத்து 56 ஆயிரத்து 125 மதிப்பிலான விலையில்லா வீட்டு மனைப் பட்டா, 30 பயனாளிகளுக்கு குடும்ப அட்டைகள், 10 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணை, வேளாண்மை துறை சார்பில் ரூ.18 ஆயிரத்து 458 மதிப்பில், 8 பயனாளிகளுக்கு மானியத்தில் வேளாண் பொருட்கள் வழங்கப்பட்டது.இதேபோல, ஊரக வளர்ச்சி துறை சார்பில் 20 மகளிர் சுய உதவிகளுக்கு ரூ.1 கோடியே 47 லட்சம் மதிப்பிலான கடன் உதவி, தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு இடுபொருட்கள், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு பவர் டில்லர் என, மொத்தம் ரூ.1 கோடியே 85 லட்சத்து 15 ஆயிரத்து 583 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கி கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார்.பின்னர் அவர் பேசியதாவது, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் கடலோரப்பகுதியான இங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. 1.47 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது. கடன் பெற்றவர்கள் முறையாக பயன்படுத்தி தங்களை வளர்த்துக்கொள்வதோடு கடனை திருப்பி செலுத்தி வங்கியின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.தஞ்சாவூர் மாவட்டத்தில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நெருங்கும் நிலையில் உள்ளோம். ஊருக்கு ஒரு வனம் திட்டத்தில் 100 வனங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டு இன்று கழனிவாசல் ஊராட்சியில் ஒரு ஏக்கர் பரப்பளவில் 100 தென்னங்கன்றுகளும், 1000 பழமரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.மனோராவில் அலையாத்தி காடுகள் உருவாக்க திட்டமிடப்பட்டு கவின்மிகு தஞ்சை, ஓம்கார் பவுண்டேஷன் சார்பில் 14 ஆயிரம் செடிகள் நடப்பட்டுள்ளன. அனைத்து திட்டங்களுக்கும் ஊராட்சி, உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் சிறப்பாக ஒத்துழைப்பு அளிக்கின்றனர்.இவ்வாறு அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, தனித்துணை ஆட்சியர் தவவளவன், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, கவின்மிகு தஞ்சை இயக்க தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், ஓம்கார் பவுண்டேஷன் டாக்டர் பாலாஜி, சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்….

The post சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குப்பதேவன் ஊராட்சி மக்கள் நேர்காணல் முகாமில் ரூ.1.85 கோடி நலத்திட்ட உதவி-தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Thanjavur District Collector ,Setupavasatram Union ,Kuppadevan ,Panchayat People ,Interview ,Camp ,Peravoorani ,Interview Camp ,Kuppadevan Panchayat ,Setupavasthram Union ,Thanjavur ,Setubavasatram Union Kuppadevan Panchayat People ,Thanjavur District ,
× RELATED பாபநாசம் தொகுதி மின்னணு வாக்குபதிவு...