×

இலங்கைக்கு எதிரான தொடரில் அதிரடி மாற்றம்; ஒரு நாள் போட்டிக்கான அணியில் தவான், ரிஷப்பன்ட் நீக்கம் ஏன்?: கே.எல்.ராகுலின் துணை கேப்டன் பதவி பறிப்பு

மும்பை: இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி.20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் ஆட உள்ளது. இதில் டி.20 போட்டி வரும் 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்திலும், 2வது போட்டி புனேவில் 5ம் தேதி, 3வது போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும், முதல் ஒருநாள் போட்டி கவுகாத்தியில் ஜன.10, 2வது போட்டி கொல்கத்தாவில் ஜன.12, 3வது போட்டி திருவனந்தபுரத்தில் ஜன.15ம் தேதியும் நடைபெற உள்ளது.இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. அண்மையில் உலக கோப்பை டி.20 தொடர் அரையிறுதியில் மோசமான தோல்வியால் கோஹ்லி, கே.எல்.ராகுல், அஸ்வின், புவனேஸ்வர்குமார் உள்ளிட்டோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். காயத்தில் இருந்து முழுமையாக குணமாகாத ரோகித்சர்மாவும் இடம்பெறவில்லை. கோஹ்லி, கே.எல்.ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும் அவர்கள் இனி டி.20 அணியில் சேர்க்கப்படுவது சந்தேகம் தான். கேப்டனாக ஆல்ரவுண்டர் ஹர்திக்பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார். முற்றிலும் இளம் வீரர்களை கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டி.20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பவுலிங்கில் அனுபவ வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. ஷிவம் மாவி சேர்க்கப்பட்டுள்ளார்.ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டனாக ரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுலிடம் இருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டுள்ள நிலையில் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி சுமார் 5 மாதத்திற்கு பின் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். காயத்தில் இருந்து குணமடையாததால் பும்ரா, ஜடேஜா, தீபக் சாகர் சேர்க்கப்படவில்லை. தொடக்க வீரர் ஷிகர் தவான், ரிஷப் பன்ட், ஷர்துல் தாகூருக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ரிஷப் பன்ட் 2 அணியிலும் இடம்பெறவில்லை. வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் மோசமான  ஆட்டத்தால் தவானுக்கு கல்தா கொடுக்கப்பட்டுள்ளது. 37 வயதான அவர் அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு இல்லை.இதேபோல் ரிஷப் பன்ட் ஒயிட்பால் கிரிக்கெட்டில் மோசமான பார்ம் காரணமாக கழற்றி விடப்பட்டுள்ளார். ஆனால் ரிஷப் பன்ட் சில காலமாக முழங்கால் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருவதாகவும், சில உடல்தகுதி பயிற்சிகளில் பங்கேற்க அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. விக்கெட் கீப்பர்கள் அதிகம் குனிந்து இருக்க வேண்டியிருப்பதால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு, பன்ட்  ஒரு பெரிய பங்கை வகிப்பதால், அவரை பலப்படுத்துதல் மற்றும் கண்டிஷனிங் அமர்வை பிசிசிஐ மருத்துவக் குழு பரிந்துரைத்துள்ளது. அதனால் இந்த தொடருக்கு அவர் தேர்வு செய்யப்படவில்லை. டி.20 அணி : ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், அர்ஷ்தீப்சிங், ஹர்ஷல் பட்டேல், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி, முகேஷ்குமார்.ஒரு நாள் போட்டி அணி: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப்சிங்.ஹைலைட்ஸ்* டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டுள்ளார்.* ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.* ஒருநாள் போட்டி அணியின் துணைக் கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டார்* ஷிகர் தவான் ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.* இரண்டு வெள்ளை பந்து அணிகளில் இருந்தும் ரிஷப் பன்ட் நீக்கப்பட்டார்* புவனேஷ்வர் குமார் இரு அணிகளிலும் இடம் பெறவில்லை* இளம் வேகப்பந்துவீச்சாளர் சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் டி20  அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.* உடற்தகுதி பெறாததால் ஜடேஜா, பும்ரா, தீபக் சாஹர் சேர்க்கப்படவில்லை.* தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இரு அணியிலும் சேர்க்கப்பட்டுள்ளார்….

The post இலங்கைக்கு எதிரான தொடரில் அதிரடி மாற்றம்; ஒரு நாள் போட்டிக்கான அணியில் தவான், ரிஷப்பன்ட் நீக்கம் ஏன்?: கே.எல்.ராகுலின் துணை கேப்டன் பதவி பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Dawan ,K.K. l. Flush ,Raqulin ,Mumbai ,India ,K. l. Rakulin ,flush ,Dinakaran ,
× RELATED ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் பேரணி