×

சமூக வலைதளங்களில் ஆட்டம் போட்ட ‘ரீல்’ மாணவி தூக்கிட்டு தற்கொலை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் சமூக வலைதளங்களில் ஆட்டம் போடும் ரீல்களை வெளியிட்டு வந்த பி.காம் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரை சேர்ந்த பி.காம் மாணவி லீனா நாக்வன்ஷி (22),  இன்ஸ்டாகிராமில் ஜாலியான ரீல்களை வெளியிட்டு பிரபலமடைந்தவர். யூடியூப் மூலமும் தனி சேனலை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கூட கிறிஸ்துமஸ் தினத்தன்று ரீல்களை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சமூக வலைதளங்களில் பின்தொடர்கின்றனர். அவ்வப்போது அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்து ஆட்டம் போடும் ரீல்களை வெளியிட்டு வந்த லீனா, இன்று அதிகாலை 1 மணியளவில் அவரது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் லீனாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இங்கேஸ்வர் யாதவ் கூறுகையில், ‘லீனாவின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் தற்கொலைக் குறிப்பு கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. பெற்றோரிடம் விசாரித்த போது, அவர்களும் தங்கள் மகளுடன் எந்த தகராறும் இல்லை என்று கூறுகின்றனர். அதனால் வெளிநபர்கள் மூலம் ஏற்பட்ட மன உளைச்சலால் லீனா நாக்வன்ஷி தற்கொலை ெசய்திருக்க வாய்ப்புள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்….

The post சமூக வலைதளங்களில் ஆட்டம் போட்ட ‘ரீல்’ மாணவி தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Reel ,RAIPUR ,BJP ,CHATEESKAR ,Dinakaraan ,
× RELATED ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்புவதாக புபேஷ் பகேல் கருத்து!!