×

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை காரணமாக அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதினால் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஐந்தருவியில் குளிக்க பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது தென்றல் தழுவும் தென்காசியில் அமைந்திருக்கும் குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மெயின் அருவியில் மட்டுமே குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஐந்தருவியில் மிதமாக அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அங்கு குளிக்க அனுமதிக்க பட்டனர். மார்கழி மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து குற்றாலத்திற்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறே இந்த ஆண்டும் தற்போது ஐயப்ப பக்தர்கள் அதிக அளவில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். …

The post மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை: குற்றாலம் பிரதான அருவி, பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை appeared first on Dinakaran.

Tags : Kutalam Main Fall ,Old Kulla ,TENKASI ,Kutculalam Main ,Fall ,Kudalam district ,Tengasi district ,West Continuing ,Dinakaran ,
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...