×

பிரான்ஸ் வந்தடைந்தார் சோப்ராஜ்

பாரிஸ்: பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சார்லஸ் சோப்ராஜ். அமெரிக்க பெண் ஒருவரை கொலை செய்த வழக்கில் நேபாள போலீசார் சோப்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது 78 வயதாகும் சோப்ராஜை நேபாள நாட்டு உச்சநீதி மன்றம் கடந்த 23ம் தேதி விடுதலை செய்தது. அதன்படி, சிறையிலிருந்து வெளியான உடனேயே நேபாள அரசு சோப்ராஜை பிரான்சுக்கு நாடு கடத்தியது. சோப்ராஜ் கத்தார் வழியாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தை நேற்று சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்ற பிரான்ஸ் நாட்டு வழக்கறிஞர், சோப்ராஜின் விடுதலையால் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். தவறான ஆவணங்களின் அடிப்படையில் அவர் மீது வழக்கு புனையப்பட்டதாக வழக்கறிஞர் கூறினார்….

The post பிரான்ஸ் வந்தடைந்தார் சோப்ராஜ் appeared first on Dinakaran.

Tags : Sobraj ,France ,Paris ,Charles Soubraj ,Sobhraj ,
× RELATED பாரீசிலிருந்து வந்த மும்பை...