×

100 வருசத்துக்கு ஒரு தொற்றுநோய் வருவது சகஜம்: தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடி ‘வேஸ்ட்’…டாக்டருக்கு படித்த ஒய்எஸ்ஆர் காங். எம்பி தடாலடி

புதுடெல்லி: கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி போடுவதை அதிகரிக்க உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்ற வருகின்றன. இந்த  நிலையில் ஆந்திர மாநிலம் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் கர்னூல் தொகுதி எம்பியான டாக்டர் சஞ்சீவ் குமார் சிங்கரி, நேற்று மக்களவையில் பேசும்போது தடுப்பூசிக்கு எதிரான முரண்பாடான கருத்தை தெரிவித்தார். இவரது பேச்சு  அவையில் இருந்த எம்பிக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் சுகாதார அமைச்சகத்தின் மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த விவாதத்தில் சஞ்சீவ் குமார் சிங்கரி பேசுகையில், ‘2021-22ம் நிதியாண்டில் கொரோனா தடுப்பூசிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா  சீதாராமன் ரூ .35,000 கோடியை ஒதுக்கி உள்ளதாக அறிவித்தார். ஆனால், ரூ .35,000 கோடியில் தடுப்பூசி போடுவது வீணான திட்டம். இதற்காக இவ்வளவு நிதியை வீணாக்க வேண்டாம்.அதற்கு பதிலாக இந்த பணத்தை நாட்டின் சுகாதார  உள்கட்டமைப்பை மேம்படுத்த பயன்படுத்தலாம். நாடு முழுவதும் ஒவ்வொரு நபருக்கும் தடுப்பூசி போடுவது சாத்தியமில்லை. கொரோனா தடுப்பூசியை பொருத்தமட்டில் 6 முதல் 9 மாதங்களுக்கு மட்டுமே சேமித்து பாதுகாக்க முடியும். அதற்கு பின் அது வீணாகிவிடும். அதனால், தடுப்பூசிக்கு செலவாகும் ரூ.35,000 கோடி ஆவியாக போய்விடும். கொரோனா போன்ற  தொற்றுநோய் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது. அது தானாகவே சென்றுவிடும். அதனால், இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. ஐதராபாத் போன்ற பல முக்கிய நகரங்கள் 60 சதவீதம் மக்கள் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து வருவதால், தடுப்பூசிக்காக அதிகளவில் பணத்தை செலவழிக்க வேண்டிய அவசியமில்லை’ என்றார்.  தடுப்பூசிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள டாக்டர் சஞ்சீவ் குமாரின் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது….

The post 100 வருசத்துக்கு ஒரு தொற்றுநோய் வருவது சகஜம்: தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட ரூ.35,000 கோடி ‘வேஸ்ட்’…டாக்டருக்கு படித்த ஒய்எஸ்ஆர் காங். எம்பி தடாலடி appeared first on Dinakaran.

Tags : YSR Kong ,Dr. ,MP Tadaladi ,NEW DELHI ,World Health Organization ,Corona epidemic ,Kong ,MB Thadaladi ,
× RELATED மண்பானை குடிநீரின் நன்மைகள்!