×

மண்பானை குடிநீரின் நன்மைகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலச்சூழலில், சுத்தமான குடிநீர் கிடைப்பது அரிதாகிப் போனதால், குடிநீரை காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுவிட்டோம். ஆனால், அந்த நீரும் எந்தளவு சுத்தமானது என்பது நமக்கு தெரியாது. மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண்பானை உறிஞ்சிக் கொண்டு நீரை சுத்தப்படுத்தி விடுகிறது. எனவே உலகத்திலேயே மிகச்சிறந்த வாட்டர் பில்டர் மண்பானைதான் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

களிமண் பானையில் தண்ணீர் குடிப்பதால் உடலில் வளர்சிதை மாற்றம் ஏற்படும். மேலும் இதில் உள்ள தாதுக்கள் ஜீரண சக்தியை அதிகரிக்கும். இயற்கையாகவே பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சியடைகிறது. இதனால், தண்ணீரின் சுவையும் அதிகரிக்கிறது. எனவேதான். கோடைக்காலத்தில் பானை நீரை அருந்தினால் அதன் குளிர்ச்சித் தன்மை
இதமான உணர்வை தருகிறது.

புதிதாக மண்பாண்டம் வாங்கும்போது, முதன்முதலில் ஊற்றும் நீரை குடிக்கக் கூடாது. ஒரு வாரம் தண்ணீர் மாற்றி மாற்றி ஊற்றிய பின்னர், தினசரி குடிக்க ஆரம்பிக்கலாம்.
கோடைக்காலத்தில் வெயில் காரணமாக சில நோய்கள் தொற்றிக் கொள்ளும். இதைத்தடுக்க மண் பானை நீர் சிறந்த இயற்கை மருந்து. கனிமச் சத்துகள் நிறைந்த பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமன்றி தீராத தாகத்தையும் ஒரு கிளாஸ் நீரில் தீர்த்துவிடும்.

மண் பானையில் நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீரை அருந்தும் போது சில பின்விளைவுகள் ஏற்படும். மண் பானை நீர் எந்த பக்கவிளைவுகளுமற்றது. குறிப்பாக சளி, இருமல், தொண்டை வறட்சி, ஆஸ்துமா, தொண்டை புண் போன்ற பிரச்னைகளுக்கு பானை நீர் சிறந்த தீர்வு தரும்.

வீட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானை வைத்து குடிநீரை ஊற்றி வைத்துக் குடியுங்கள். அடிக்கடி மணல் ஈரப்பதத்துடன் இருக்கிறதா என பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அப்போதுதான் நீர் குளிர்ச்சியாக இருக்கும். கோடை வெப்பத்திற்கு இதமாக இருக்கும்.

தொகுப்பு: ரிஷி

The post மண்பானை குடிநீரின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Dr. ,Dinakaran ,
× RELATED வேண்டாமே சாலைவெறி ROAD RAGE தவிர்ப்போம்