×

தேர்தல் தோல்வியால் ஆத்திரம் வாள் எடுத்து மக்களை மிரட்டிய வேட்பாளர்: வீடியோ வைரல்

அகோலா: பஞ்சாயத்து தேர்தலில்  தோல்வி அடைந்த வேட்பாளர் ஒருவர் பொதுமக்களை வாளை காட்டி மிரட்டிய சம்பவம்  சமூக வலை தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம், அகோலா மாவட்டம் படூர்  தாலுகாவில் உள்ள காம்கேட் கிராமத்தில் சமீபத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல்  நடைபெற்றது. இதில் 45 வயது நபர் ஒருவர் கிராம பஞ்சாயத்து உறுப்பினராக  போட்டியிட்டார். ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெறவில்லை. இதனால்  ஆத்திரமடைந்த அவர் வாள் ஒன்றை எடுத்துக்கொண்டு கிராமம் முழுவதும் சுற்றி  மிரட்டல் விடுத்தபடி சென்றார். அப்போது அவர் வாளை காட்டி பொதுமக்களை  மிரட்டியதுடன் கிராம மக்களை வசை மாறி பொழிந்தபடி சென்றார். இந்த வீடியோ  காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மிரட்டல் விடுத்த  நபரின் குடும்பத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக கிராம பஞ்சாயத்து தேர்தலில்  போட்டியிட்டு வெற்றி பெற்று வந்த நிலையில் தற்போது இவர் தோல்வி  அடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பொதுமக்களை வாளை காட்டி  மிரட்டியுள்ளார். தலைமறைவான அந்த நபரை தேடி வருகின்றனர்….

The post தேர்தல் தோல்வியால் ஆத்திரம் வாள் எடுத்து மக்களை மிரட்டிய வேட்பாளர்: வீடியோ வைரல் appeared first on Dinakaran.

Tags : Akola ,
× RELATED இந்திரா காந்தி பிறந்தநாள் ராகுல்...