×

தவாங் மோதலுக்கு மத்தியில் இந்தியா – சீன கமாண்டர்கள் சந்திப்பு: 10 மணி நேரம் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் ெசக்டர் எல்லைப் பகுதியில் இந்திய – சீன வீரர்களுக்கு இடையே கடந்த 9ம் தேதி திடீர் மோதல் ஏற்பட்டது. இதற்கிடையே கிழக்கு லடாக்கில் நிலுவையில் உள்ள பிரச்னைகளைத் தீர்ப்பது தொடர்பாக  இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மத்தியில் கடந்த 20ம் தேதி 17வது சுற்று உயர்மட்ட ராணுவ பேச்சுவார்த்தை நடந்தது. இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இரு நாடுகளுக்கு இடையிலான எல்லை பிரச்னைகளை இரு தரப்பினரும் வெளிப்படையான மற்றும் ஆக்கபூர்வமான முறையில் பேசித் தீர்த்துக் கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் சுஷூல்-மோல்டோ எல்லை பகுதியில் இந்த சந்திப்பானது, சுமார் 10 மணி நேரம் நீடித்ததாக தகவல்கள் கூறுகின்றன. இதுகுறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், ‘சீன எல்லையில் உள்ள சுஷுல்-மோல்டோ எல்லை பகுதியில் கடந்த 20ம் தேதி இந்தியா-சீனா கமாண்டர் அளவிலான 17வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. மேற்கு அசல் கட்டுப்பாட்டுக் கோடு (எல்.ஏ.சி) தொடர்புடைய பிரச்னைகளைத் தீர்ப்பது குறித்து இரு தரப்பினரும் அவரவர் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்’ என்றார்….

The post தவாங் மோதலுக்கு மத்தியில் இந்தியா – சீன கமாண்டர்கள் சந்திப்பு: 10 மணி நேரம் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : India ,Tawang ,New Delhi ,Dawang ,Arunachal Pradesh ,Dinakaran ,
× RELATED மக்களவையில் துணை சபாநாயகர் பதவி...