×

இன்ஜி. கல்லூரியில் 14 மாணவர்கள், பேராசிரியருக்கு கொரோனா

திருச்சி: திருச்சி அருகே சேதுராப்பட்டியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 14 மாணவர்கள் மற்றும் ஒரு பேராசிரியருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 15 பேரும் அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கல்லூரியில் அனைத்து வகுப்பறைகளுக்கும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக சுகாதாரதுறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு தலைமையில் திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா பரவல் தடுப்பு அவசர ஆலோசனை கூட்டம் நேற்று காலை நடந்தது. பின்னர் நாராயண பாபு கூறுகையில், மாணவர்களுக்கு எந்தவித அறிகுறியும் இல்லாத தொற்று பரவியுள்ளது. வீரியமில்லாத கொரோனா வைரஸாக தான் உள்ளது என்றார். …

The post இன்ஜி. கல்லூரியில் 14 மாணவர்கள், பேராசிரியருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Trichy ,Government Engineering College ,Seturapatti ,
× RELATED திருச்சியில் சோகம் கொள்ளிடம் தடுப்பணையில் குளித்த மாணவன் பலி