×

இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

மிர்பூர்: இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் போட்டி, மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் இன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி,முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இரு அணிகளும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. சட்டோகிராமில் நடந்த முதல் டெஸ்டில், 188 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் இன்று தொடங்குகிறது.காயம் காரணமாக கேப்டன் ரோகித் ஷர்மா, வேகப் பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி இருவரும் இந்த போட்டியில் விளையாடமாட்டார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், கே.எல்.ராகுல் தலைமை பொறுப்பில் நீடிக்கிறார். முதல் டெஸ்டில் கில், புஜாரா, பன்ட், ஷ்ரேயாஸ், அஷ்வின், குல்தீப் ஆகியோர் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ரன் குவிப்புக்கு உதவினர். பந்துவீச்சில் குல்தீப், அக்சர், சிராஜ் விக்கெட் வேட்டை நடத்தினர். அஷ்வின், உமேஷ் பந்துவீச்சும் சிறப்பாகவே இருந்தது. இந்த நிலையில், 2வது போட்டியிலும் வென்று தொடரை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது. அதே சமயம், ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணியும் இந்த போட்டியில் வென்று 1-1 என்ற கணக்கில் தொடரை டிரா செய்ய வரிந்துகட்டுகிறது. அந்த அணியில் எபாதத் உசேன் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால், அவருக்கு பதிலாக டஸ்கின் அகமது சேர்க்கப்படும் வாய்ப்பு உள்ளது. மிர்பூர் ஆடுகளம் தொடக்கத்தில் ரன் குவிப்புக்கும், 2வது நாளில் இருந்தே சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இருக்கும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட் செய்யும் வாய்ப்பு அதிகம். தொடரை வெல்ல இந்தியாவும், சமன் செய்ய வங்கதேசமும் உறுதியுடன் உள்ளதால், ஆட்டத்தில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கலாம்.* கடைசியாக விளையாடிய 5 டெஸ்டில், இந்தியா 3 வெற்றி, 2 தோல்வி கண்டுள்ளது. ஒரு போட்டியை மட்டும் டிரா செய்த வங்கதேசம், தொடர்ச்சியாக 4 தோல்விகளை சந்தித்துள்ளது.* டெஸ்ட் போட்டிகளில் 7000 ரன் மைல்கல்லை எட்டும் 8வது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற செதேஷ்வர் புஜாராவுக்கு இன்னும் 16 ரன் மட்டுமே தேவை.இந்தியா: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆர்.அஷ்வின், ஸ்ரீகர் பரத், அபிமன்யு ஈஸ்வரன், ஷ்ரேயாஸ் அய்யர், விராத் கோஹ்லி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ரிஷப் பன்ட், அக்சர் படேல், செதேஷ்வர் புஜாரா, சவுரவ் குமார், ஷுப்மன் கில், ஷர்துல் தாகூர், ஜெய்தேவ் உனத்கட், உமேஷ் யாதவ்.வங்கதேசம்: ஷாகிப் ஹசன் (கேப்டன்), அனாமுல் ஹக், எபாதத் உசேன், காலித் அகமது, லிட்டன் தாஸ், மகமதுல் ஹசன் ஜாய், மெஹிதி ஹசன் மிராஸ், மோமினுல் ஹக், முஷ்பிகுர் ரகிம், நஜ்முல் உசேன் ஷான்டோ, நசும் அகமது, நூருல் ஹசன், ரகுமான் ராஜா, தைஜுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, யாசிர் அலி, ஜாகிர் ஹசன்….

The post இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : India ,Bangladesh ,Mirpur ,National Stadium ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் 11 பேர் திரிபுராவில் கைது