×

கல்வி உதவித்தொகை; முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு

சென்னை:   மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 7ம்தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். நிறுத்தப்பட்ட மவுலானா அபுல் கலாம் ஆசாத் கல்வி உதவித் தொகையை மீண்டும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கோரினார்.மேலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு ஒருவேளை இந்த உதவித் தொகையை வழங்க மறுத்து விட்டால் தமிழ்நாடு அரசு வழங்கும் என்று கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்திய கிறிஸ்மஸ் பெருவிழாவில் ஆற்றிய உரையின் போது இனிப்பான அறிவிப்பை வழங்கினார். அதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

The post கல்வி உதவித்தொகை; முதல்வருக்கு ஜவாஹிருல்லா பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Jawahirullah ,Chennai ,Humanitarian People's Party ,Jawahirlah MLA ,Tamil ,Nadu ,Chief President of ,Muhammad Jawahirlah ,MLA ,G.K. Stalin ,Javahirullah ,
× RELATED நீட் தேர்வு என்ற கல்வி மோசடியை இனியும்...