×

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்: புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம்

கராச்சி: புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமினம் செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரமீஸ் ராஜா நியமிக்கப்பட்டார். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து, பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது. இதனால் பாகிஸ்தான் நிர்வாகம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து சேதி ட்விட்டரில், ரமீஸ் ராஜா தலைமையிலான கிரிக்கெட் ஆட்சி இனி இல்லை. 2014 பிசிபி அமைப்பு மீட்டெடுக்கப்பட்டது. முதல்தர கிரிக்கெட்டுக்கு புத்துயிர் அளிக்க நிர்வாகக்குழு, அயராது பாடுபடும். ஆயிரக்கணக்கான கிரிக்கெட் வீரர்கள் மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும், கிரிக்கெட்டில் பஞ்சம் முடிவுக்கு வரும் என்று பதிவிட்டுள்ளார்….

The post பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ரமீஸ் ராஜா அதிரடி நீக்கம்: புதிய தலைவராக நஜாம் சேத்தி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Ramiz Raja ,Pakistan Cricket Board ,Najam Sethi ,Karachi ,Najam Chetti ,Ramiz ,Dinakaran ,
× RELATED இலங்கையில் ஆசிய கோப்பை கிரிக்கெட்...