×

அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம்: அகரமேல் கிராம மக்கள் வலியுறுத்தல்

பூந்தமல்லி: பூந்தமல்லி ஒன்றியம், அகரமேல் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு அருகே மிகவும் பழமையான கட்டடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. அக்கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கு புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த இடத்தை முறையாக அளவீடு செய்து, புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட வேண்டும் என பூந்தமல்லி தாசில்தாரிடம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.இந்நிலையில், புதிய ரேஷன் கடை கட்டடத்துக்கான நிலத்தை அளக்க நேற்று பூந்தமல்லி வருவாய்துறை அதிகாரிகள் வந்தனர். அப்பகுதியில் இருந்த வீட்டின் உரிமையாளர்கள், இந்த இடம் குறித்து நீண்ட காலமாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வருவதால் அந்த இடத்தை அளவீடு செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அங்கு நிலத்தை அளக்க வந்த தாசில்தார், அப்பகுதி பெண்களை ஒருமையில் பேசியதாக கூறி எதிர்ப்பு தெரிவித்து, நிலத்தை அளவீடு செய்யும் பணிகளை தடுத்து, 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாசில்தார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நில அளவீடு பணிகளை கைவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர். நசரத்பேட்டை போலீசார் பெண்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர். தற்போது இந்த இடம் தொடர்பான வழக்கு நீதிமன்ற நிலுவையில் இருப்பதால், தீர்ப்பு வந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது ஊராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடங்கள் உள்ளன. அதில் புதிய ரேஷன் கடை கட்டடம் கட்ட நில அளவீடு செய்யாமல், தனியாருக்கு சொந்தமான பட்டா இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டக்கூடாது என கிராம மக்கள் வலியுறுத்துகின்றனர்….

The post அரசுக்கு சொந்தமான இடத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம்: அகரமேல் கிராம மக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Agaramel ,Poontamalli ,Poontamalli Union ,Akaramel Panchayat Council ,Akaramel ,Dinakaran ,
× RELATED நிர்வாண நிலையில் கை, கால்கள்...