×

டெல்டா மீனவர்கள் 3வது நாளாக முடக்கம்

வேதாரண்யம்: வங்கக்கடலில் கடந்த வாரம் காற்றழுத்தம் உருவானது. அது காற்றத்த தாழ்வு பகுதியாக மாறி தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மழை பெய்வதுடன் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோர பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். இதனால் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.இதனால் கடல் சீற்றம் காரணமாக டெல்டாவில் உள்ள மீனவர்கள் இன்று 3வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டத்தில் ஒரு லட்சம் பேர், மயிலாடுதுறையில் 10,000 பேர், திருவாரூரில் 6,500 பேர், தஞ்சையில் 10,000 பேர், புதுக்கோட்டையில் 1,500 பேர், காரைக்காலில் 5,000 பேர் இன்று கடலுக்கு செல்லவில்லை. துறைமுகம், கடற்கரைகளில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது….

The post டெல்டா மீனவர்கள் 3வது நாளாக முடக்கம் appeared first on Dinakaran.

Tags : Delta ,Vedaranasam ,Bengal Sea ,southern Bengal region ,Fishermen ,Dinakaran ,
× RELATED டெல்டா மாவட்டங்களில் 4வது நாளாக மழை;...