×

அண்ணாமலையின் ரபேல் வாட்ச் டிவிட்டரில் டிரெண்டிங்: பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருவதால் பரபரப்பு

சென்னை: பாஜ தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் ரபேல் வாட்ச் விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வாட்ச் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது. பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வித்தியாசமான ரபேல் வாட்ச் பல லட்சம் ரூபாயில் செலவில் வாங்கப்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து தினந்தோறும் பல்வேறு விதமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இந்த கடிகாரத்தின் விலை குறித்தும், நேர்மையான ஒரு எஸ்பியாக பணியாற்றிய அண்ணாமலை எப்படி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாட்ச் எப்படி வாங்கினார். எங்கிருந்து இவ்வளவு தொகை வந்தது. அதற்கான முறையான ரசீது இருக்கிறதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இதற்கு அண்ணாமலை இதுவரை நேரடியாக பதில் அளிக்கவில்லை. விரைவில் நான் மேற்கொள்ளும் பாதயாத்திரையில் இதற்கான விளக்கம் அளிக்கப்படும் என்று மட்டும் தெரிவித்துள்ளார்.அவர் தனது விளக்கத்தை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் அண்ணாமலை கட்டியுள்ள வாட்ச் தற்போது அனைத்து இடங்களிலும் விவாத பொருளாக மாறியுள்ளது. மேலும் அந்த வாட்சில் என்னதான் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுபவர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது. அந்த வாட்ச்சில் அப்படி என்ன தான் அம்சங்கள் அடங்கியிருக்கிறது. அதன் விலை என்ன, அந்த வாட்ச் எங்கு கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் நம் மக்கள் தேட ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரபேல் வாட்ச் டிரெண்ட் ஆகியுள்ளது. நிறைய பேர் வாட்ச் தொடர்பாக விவரங்கள், கமெண்ட் அடித்து வருவதால் தற்போது டிவிட்டரில் அது டிரெண்ட் ஆகியுள்ளது. பல ஆயிரம் பேர் தங்களது கருத்தை பதிவு செய்து வருகின்றனர்….

The post அண்ணாமலையின் ரபேல் வாட்ச் டிவிட்டரில் டிரெண்டிங்: பலர் தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருவதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Twitter ,CHENNAI ,BJP ,president ,Dinakaran ,
× RELATED தண்ணீர் பற்றாக்குறை அரசுக்கு அண்ணாமலை வலியுறுத்தல்