×

கோத்தகிரியில் 3 தலைமுறையாக நிறைவேறாமல் இருந்த இயற்கை குடிநீர் சேவையால் 10 கிராம மக்கள் பயன்-24 மணி நேர விநியோகத்தால் மகிழ்ச்சி

கோத்தகிரி : கோத்தகிரியில் மூன்று தலைமுறைகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த இயற்கை குடிநீர் சேவையை 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு நெடுகுளா ஊராட்சி மன்றம் கொண்டு சேர்த்துள்ளது.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது நெடுகுளா ஊராட்சி. இதில் 15 வார்டுகளை உள்ளடக்கி 47 கிராமங்கள் உள்ளன. நெடுகுளா ஊராட்சி மன்ற தலைவராக சுகுணா சிவா, துணை தலைவராக மனோகரன் ஆகியோர் உள்ளனர். நெடுகுளா ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளான குன்னியட்டி, கொட்டநள்ளி, பாமுடி, இந்திரா நகர், லில்லியட்டி, மிளிதேன், கப்பட்டி, நாரகிரி, கேர்க்கம்பை மற்றும் காக்கா சோலை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள பொதுமக்களின் அடிப்படை வசதிகளை முன்னெடுத்து, அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.குறிப்பாக தண்ணீர் பிரச்னை சுமார் மூன்று தலைமுறைக்கு முன்பு  வனப்பகுதியில் இருந்து கிடைக்கும் இயற்கை குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்திய நிலையில் குறிப்பிட்ட சில காரணங்களால் குடிநீர் குழாய் சீரமைப்பு, நீர்தேக்க தொட்டி, தொலைதூரத்தில் இருந்து தண்ணீர் வர சிரமம் போன்ற காரணங்களால் இயற்கை குடிநீர் விநியோகம் எந்தவொரு கிராமத்திற்கும் வழங்கப்படவில்லை.ஆனால் அதிக குடியிருப்புகளையும், அதிக மக்கள் வசிக்கும் இந்த நெடுகுளா ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட கிராமங்களில் குடிநீர் பிரச்னை அதிகமாக இருந்தது.தற்போதுள்ள நெடுகுளா ஊராட்சி மன்ற தலைவர் சுகுணா சிவா பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்தார். மீண்டும் இயற்கையான முறையில் உருவாகும் சோலை குடிநீர் சுமார் ஒரு சில கிராமங்களுக்கு இரண்டு முதல் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்து குன்னியட்டி, கொட்டநள்ளி, பாமுடி, இந்திரா நகர், லில்லியட்டி, மிளிதேன், கப்பட்டி, நாரகிரி, கேர்க்கம்பை மற்றும் காக்கா சோலை போன்ற கிராமங்களுக்கு வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்ட ஊராட்சி மன்ற நிதியிலிருந்தும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய நிதியில் இருந்தும், நெடுகுளா ஊராட்சி மன்ற நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கப்பட்டு  வனப்பகுதியில் இருந்து சுமார் இரண்டு முதல் ஐந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்து குடிநீர் குழாய்கள் அமைத்து, உபகரணங்கள் வாங்கப்பட்டன.குன்னியட்டி, கொட்டநள்ளி, பாமுடி, இந்திரா நகர், லில்லியட்டி, மிளிதேன், கப்பட்டி, நாரகிரி, கேர்க்கம்பை மற்றும் காக்கா சோலை கிராமங்களில் உள்ள குடிநீர் தொட்டியில் குடிதண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு  பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. முக்கிய பிரச்னையான குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு, வாரம் 3 நாட்கள் மட்டும் குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட கிராமத்திற்கு தற்போது 24 மணி நேரமும் எந்தவித தட்டுப்பாடும் இன்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிறப்பு மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டம் மூலமாக நெடுகுளா ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் பொதுக்கிணறு, ஊராட்சி மன்ற பொது நிதியியல் இருந்து நெடுகுளா ஊராட்சி மன்றத்தின் மூலம் அடிப்படை வசதி, கழிவுநீர் கால்வாய், நடைப்பாதை சேதம் போன்றவற்றை ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் 15வது நிதிக்குழு மானியம் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் கிராமப்புற அடிப்படை வசதிகளான நடை பாதை, கழிவுநீர் கால்வாய், தடுப்புச்சுவர் கட்டும் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.குறிப்பாக மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வகையில் கிராமப்புற தூய்மை, காலை மாலை என இரு வேலையும் பணி போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. நெடுகுளா ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாசிவா, துணை தலைவர் மனோகரன் மற்றும் 15 வார்டு உறுப்பினர்களின் உதவியோடு நெடுகுளா ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட குருகத்தி, நெடுகுளா, சேலக்கொரை, உல்லதட்டி போன்ற கிராமப்பகுதிகளில் இயற்கை குடிநீர் விநியோகம் ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும் 47 கிராம பொதுமக்களிடம் மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மரங்கள் நடப்பட்டு பொதுமக்களிடத்தில் ஒரு நன் மதிப்பைப் பெற்றுள்ளது நெடுகுளா ஊராட்சி மன்றம்….

The post கோத்தகிரியில் 3 தலைமுறையாக நிறைவேறாமல் இருந்த இயற்கை குடிநீர் சேவையால் 10 கிராம மக்கள் பயன்-24 மணி நேர விநியோகத்தால் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Natural Drinking Water Service ,Gothagiri ,Nedugula Rutam ,Dinakaran ,
× RELATED கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு