×

கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு

கோத்தகிரி : கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய அரசு சுற்றுச்குழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி கேபிஎஸ் தனியார் கல்லூரி மற்றும் என்பிஏ பாலிடெக்னிக்கில் விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தப்பட்டன.

இதில் மாணவர்கள், பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள், அன்றாட செயல்பாடுகள், வாழ்க்கையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துதல், திடக்கழிவு மேலாண்மையை பின்பற்றுதல் மற்றும் நீர் நிலைகள் பாதுகாப்பு, ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பொருட்களை தவிர்த்தல், காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள் அவற்றை எவ்வாறு தவிர்ப்பது, பல்லுயிர் பாதுகாப்பு செயல்கள், வீட்டு பொருட்கள் உபயோகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மின் சாதனங்கள் மற்றும் கணினி, மொபைல் போன்ற எலெக்ட்டிரானிக் கழிவுகள் கையாலுதல், மண் வளம் மற்றும் இயற்கை வளம் காத்தல் போன்றவை குறித்து விளக்கம் அளித்தனர்.

அதிக அளவில் தற்போது பயன்பாட்டில் உள்ள ஒருமுறை மட்டும் பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பேப்பர் மற்றும் பிளாஸ்டிக் காபி கிரேனி கப், தண்ணீர் கப் என அன்றாட வாழ்க்கையில் டீ கடை, ஹோட்டல், விசேஷ வீடுகளில் அதிகரித்து கொண்டு செல்கிறது. மண்டபங்களில் பயன்படுத்தி தூக்கி எரியப்படும் குப்பை கழிவுகள், இவற்றை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் உணர்ந்து அவற்றின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.

பாரம்பரிய முறையில் சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், தட்டு வாழை இவற்றை பயன்படுத்த வேண்டும் என தெரு நாடகம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவன செயலாளர் வேங்கடேசன் துண்டு பிரசுரம் மற்றும் துணி பைகளை மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் வழங்கினார். இதையடுத்து நிகழ்ச்சி முடிவில் நெஸ்ட் தன்னார்வலர் ராமதாஸ் நன்றி கூறினார்.

The post கோத்தகிரியில் தெரு நாடகம் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Gothagiri ,Kotagiri ,Central Government Department of Environment, Forests and Climate Change ,Government of Tamil Nadu Department of Environment and Climate Change ,
× RELATED கோத்தகிரி நேரு பூங்காவில் குவிந்த சுற்றுலா பயணிகள்