×

தோகைமலை, கடவூர் பகுதிகளில் சம்பா சாகுபடி வயல்களில் நெல்மணிகள் காய்க்க தொடங்கியது-விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளில் சம்பா சாகுபடி செய்த பயிர்களில் பூட்டு பெற்று நெல்மணிகள் காய்க்கத்தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.தோகைமலை மற்றும் கடவூர்ஒன்றிய பகுதிகளில் இந்த ஆண்டு சம்பா சாகுபடியை தொடங்கி உள்ள விவசாயிகள் டிகேஎம்-13, பிபிடி-5204, சிஆர்-1009, சிஓ-51, சிஓ-52, ஆகிய நெல் ரகங்களின் விதைகளை வேளாண்மைதுறை மற்றும் தனியார்கடைகளில் பெற்று நெற்களை தெளித்தனர். கடந்த புரட்டாசி மாதம் இறுதிக்குள் 15 அல்லது 20 நாள் பயிர்களை நடவு செய்த வயல்களில் கொல நோய், யானைக்கொம்பான், இழைசுருட்டு போன்ற நோய்கள் தாக்காது என்று முன்னோடி விவசாயிகள் கூறுகின்றனர். பருவம் தவாp 30 நாள் பயிர்களை கடந்த (புரட்டாசி மாதத்திற்கு பிறகு) வயல்களில் நடவு செய்திருந்தால் கொலநோய், யானைக்கொம்பான், இழைசுருட்டு போன்ற நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர்.போதிய இடைவெளி விட்டு பயிர்களை நட்டு இருந்தால் புகையான் என்னும் நோய் வராமல் தடுக்கலாம் என்றும் கூறுகின்றனர். 120 நாட்களில் மகசூல் அடையும் இந்த வகை நெல் விதைகளை விவசாயிகள் வேளாண்மை துறைகளில் மானிய விலையில் பெற்று நடவு செய்து இருந்தனர். இதேபோல் சம்பா சாகுபடியில் ஏடிடீ 44 என்ற ரகமானது கூடுதல் விளைச்சலை கொடுத்து வருவதாகவும் முன்னோடி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். 145 முதல் 150 நாள் வரை வளரக்கூடிய இந்த வகையான ரகத்தை ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர்10 நாள் வரை விதைப்பு செய்யலாம்.ஒரு எக்டேருக்கு 30 கிலோ விதை நெல்லை தெளித்த பின்பு, 25ம் நாள் 33 குத்துக்களாக பிரிக்க வேண்டும். பின்னர்20க்கு 15 செ.மீ இடைவெளி விட்டு ஒரு சதுர மீட்டருக்கு 33 குத்துக்கள் நடவு செய்ய வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப ஒரு எக்டேருக்கு 12.5 அல்லது 6.25 டன் அளவுகளில் தொழு உரம் இட்டு இருக்க வேண்டும். இதேபோல் ஒரு எக்டேருக்கான விதை நெல்லை ஊற வைக்கும் போது 5 கிலோ அசோஸ்பைரில்லம் இடவேண்டும். ஒரு எக்டேருக்கு 2 கிலோ பாஸ்போ பாக்டோரியா இடவேண்டும். இதேபோல் கடைசி உழவின் போது அடி உரமாக ஒரு எக்டேருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும் தெரிவிக்கின்றனர்.மேலும் முதல் உரம் இட்டு 25ம் நாள் 30 கிலோ, 2ம் உரம் இட்டு 50ம் நாள் 30 கிலோ, 3ம் உரம் இட்டு 75ம் நாள் 30 கிலோ தழைசத்து மற்றும் 30 கிலோ சாம்பல் சத்து, 100வது நாளில் 30 கிலோ தழை சத்து என மேல் உரங்களாக இட வேண்டும். இதேபோல் நடவு செய்யும் போது ஒரு எக்டேருக்கு 25 கிலோ துத்தநாகசல்பேட்டும், நடவு செய்து 10வது நாளில் நீலப்பச்சை பாசி 10 கிலோ இடவேண்டும்.எனவே ஏடிடீ 44 என்ற ரகமானது பாக்டீரியல் இலைகருகள் மற்றும் இலையுறை அழுகல் நோயால் பாதிக்கப்பட கூடியது என்பதால் விவசாயிகள் முன்கூட்டியே மருந்துகள் அடிக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். மேலும் ஏடிடீ 44 என்ற ரக பயிர்கள் பச்சை தத்துப்பூச்சி, குலை நோய், குருத்துப்பூச்சி, இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்பு திறன்கள் கொண்டதாகவும், இலைசுருட்டுப்புழுவிற்கு நடுத்தரமான எதிர்ப்பு திறன்களும் உடையது என்று முன்னோடி விவசாயிகள் கூறுகின்றனர்.தற்போது கடவூர் மற்றும் தோகைமலை ஒன்றிய பகுதிகளில் சம்பா நெல் பயிர்களை நடவு செய்யப்பட்டு உள்ள வயல்களில் பூட்டு பெற்று நெல்மணிகள் காய்க்கத் தொடங்கி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.வருகின்ற தை மாதத்தில் அறுவடைக்கு வரும் என்பதால் பல்வேறு செலவுகளுக்கு இடையே எதிர்பார்த்த மகசூல் பெற்று லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் எதிர்பார்த்து காத்து உள்ளனர்….

The post தோகைமலை, கடவூர் பகுதிகளில் சம்பா சாகுபடி வயல்களில் நெல்மணிகள் காய்க்க தொடங்கியது-விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thokaimalai ,Kadavur ,Dokaimalai ,Karur district ,Tokaimalai ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...