×

மலை கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 30 கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்த போலீசார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மலைகிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 30 கஞ்சா செடிகளை போலீசார் கைப்பற்றி அழித்தனர். ஜமுனாமரத்தூரில் கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்பட்டு வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போளூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் புனிதா மற்றும் ஜமுனாமரத்தூர் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து அத்ரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.போளூர் அடுத்து ஜவ்வாது மலையில் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள மலைகிராமத்தில் சங்கர் என்பவர்  தனக்கு சொந்தமான இடத்தில் 30 கஞ்சா செடிகளை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார்.  அங்கு சென்ற போலீசார் தோட்டத்தில் உள்ள அனைத்து கஞ்சா செடிகளையும் கைப்பற்றி அழித்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சங்கரையும் தேடி போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்….

The post மலை கிராமத்தில் பயிரிடப்பட்டிருந்த 30 கஞ்சா செடிகளை கைப்பற்றி அழித்த போலீசார் appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Maikiramam ,Tiruvannamalai district ,Polur ,Jamunamarathur ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...