×

சென்னை மாநகராட்சி 189வது வட்ட அவைத்தலைவர் கு.வெற்றிவேல் இல்ல திருமண விழா: அமைச்சர்கள் பங்கேற்பு

வேளச்சேரி: சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் மத்திய பகுதி, 189வது வட்டம் (பள்ளிக்கரணை) திமுக அவைத்தலைவர் கு.வெற்றிவேல்-வெ.ராஜலட்சுமி ஆகியோரின் மகள் பல் மருத்துவர் சிந்துஜா- இன்ஜினியர் குமரன் ஆகியோர் திருமணம் கோவிலம்பாக்கம் ராணி மஹால் திருமண மண்டபத்தில் நடந்தது.  விழாவுக்கு, சோழிங்கநல்லூர் மையப்பகுதி செயலாளரும் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏவுமான அரவிந்த் ரமேஷ் தலைமை தாங்கினார்.  சென்னை மாநகராட்சி 189வது கவுன்சிலரும் வட்டசெயலாளருமான வ.பாபு வரவேற்புரையாற்றினார். மாவட்ட பிரதிநிதி கே.தேவேந்திரன், பகுதி துணை செயலாளர் வீ.குமரேசன், மாவட்ட பிரதிநிதி பீ.கே.தங்கம், வட்ட துணை செயலாளர்கள் சந்திரசேகரன், ஜெகதீசன், ஆனந்தி, வட்ட பொருளாளர் வீரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளரும் சுகாதாரத்துறை  அமைச்சருமான மா.சுப்பிரமணியன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன், எம்எல்ஏக்கள்  எஸ்.ஆர்.ராஜா, பிரபாகர்ராஜா, தாமஸ்மலை ஒன்றிய செயலாளர் கோவிலம்பாக்கம் வெங்கடேசன் மற்றும் மாவட்ட, பகுதி, வட்ட, ஒன்றிய திமுக நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய திமுக பிரமுகர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 189வது வட்ட அவை தலைவர்   கு.வெற்றிவேல்-வெ.ராஜலட்சுமி ஆகியோர் நன்றி தெரிவித்தனர்….

The post சென்னை மாநகராட்சி 189வது வட்ட அவைத்தலைவர் கு.வெற்றிவேல் இல்ல திருமண விழா: அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Municipal Corporation ,189th Circle ,G.Vetrivel ,Chennai South District, Chozhinganallur Central Area ,189th Ward ,Pallikaranai ,DMK ,President ,K.Vetrivel ,V.Rajalakshmi ,Chennai Corporation ,
× RELATED சென்னையில் அனுமதியின்றி...