×

‘விஜய் திவாஸ்’ கடைபிடிப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை

புதுடெல்லி: கடந்த 1971ம் ஆண்டில் இதே நாளில் (டிச. 16), பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்திய ராணுவம் வென்றது. அப்ேபாது பாகிஸ்தானின் 93 ஹஜ்ரா வீரர்கள் இந்தியாவிடம் சரணடைந்தனர். இந்த நாளில், உலகின் அரசியல் வரைபடத்தில் பங்களாதேஷ் என்ற புதிய நாடு உருவானது. இந்நிலையில் இன்று ‘விஜய் திவாஸ்’ என்ற பெயரில் இந்திய ராணுவத்தின் துணிச்சலுக்கு வணக்கம் செலுத்தும் வகையில் வெற்றி தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதையடுத்து குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்கள்  ‘விஜய் திவாஸ்’ வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதேபோல் நாடு முழுவதும் இன்று ராணுவம் சார்பில்  ‘விஜய் திவாஸ்’ தினம் கடைபிடிக்கப்பட்டது….

The post ‘விஜய் திவாஸ்’ கடைபிடிப்பு: அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை appeared first on Dinakaran.

Tags : Vijay Diwas' ,Minister ,Rajnath Singh ,New Delhi ,Indian Army ,Pakistan ,Abeybadu… ,
× RELATED ஒர்க் ஃப்ரம் ஹோம் தெரியும் ஒர்க்...