×

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் சமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: சரத்குமார், ராதிகா போட்டி இல்லை; தலைவர் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் சமத்துவ மக்களின் கட்சியின் 37 பேர் கொண்ட பட்டியலை சமக தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ளார். மேலும் அனைத்து தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் தலைவர் சரத்குமார் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி, மநீம, ஐஜேகே கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்திக்கின்றனர். இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி 37 தொகுதிகளில் போட்டியிடுவதாக கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் நேற்று அறிவித்தார். இது சமக தலைமை வெளியிட்ட அறிக்கை: தூத்துக்குடி தொகுதியில் என்.சங்கர், மதுரை தெற்கு-ஜி.ஈஸ்வரன், ராஜபாளையம்-என்.எம்.எஸ்.விவேகானந்தன், சிவகங்கை- நேசம் ஜோசப், வாணியம்பாடி- எம்.ஞானதாஸ், விளாத்திகுளம்- எம்.எக்ஸ்.வில்சன், முதுகுளத்தூர்- நவபன்னீர் செல்வம், சங்ககிரி-கே.செங்கோடன், தென்காசி- டி.ஆர்.தங்கராஜ், பத்மநாபபுரம்- எம்.ஜெபராஜ், அம்பாசமுத்திரம்- செங்குளம் சி.கணேசன், வாசுதேவநல்லூர்- சின்னசாமி, அந்தியூர்- ஏ.குருநாதன், ஆத்தூர்- ஏ.பி.சிவா, விருதுநகர்- என்.மணிமாறன், திருநெல்வேலி- அழகேசன், திருச்செந்தூர்- ஜெயந்திகுமார், கிருஷ்ணராயபுரம்- வி.சரவணன், பெரியகுளம்- அரசுப்பாண்டி, கிள்ளியூர்- ஆண்டனி, உத்திரமேரூர்-ஏ.சூசையப்பர், விளவங்கோடு- அருள்மணி, கடலூர்-கே.ஆனந்தராஜ், ஆலங்குளம்- எஸ்.செல்வக்குமார், திருச்செங்கோடு- குட்டி(எ) ஜனகராஜ், ராதாபுரம்- உத்திரலிங்கம், நாங்குநேரி- சார்லஸ் ராஜா, ஆம்பூர்-எஸ்.ராஜா, ஜோலார்பேட்டை-ஆர்.கருணாநிதி, போளூர்- ஜி.கலாவதி, உளுந்தூர் பேட்டை- சின்னையன், ரிஷிவந்தியம்- சண்முகசுந்தரம், லால்குடி- டி.முரளிகிருஷ்ணன்,சிதம்பரம்- ஜி.தேவசகாயம், சீர்காழி- ஜி.பிரபு, திருத்துறைப்பூண்டி- பாரிவேந்தன், துறைமுகம்-எம்.ஏ.கிச்சா ரமேஷ் ஆகியோர் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். இவ்வாறு சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதால் சமக தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிவித்துள்ளார்….

The post சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் சமக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: சரத்குமார், ராதிகா போட்டி இல்லை; தலைவர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Samaka ,Sarathkumar ,Radhika ,Samak ,Equality People's Party ,Dinakaran ,
× RELATED நடிகை ராதிகா, சரத்குமார் குறித்து...