×

தாம்பரம் அருகே குளிர்சாதன பேருந்து கண்ணாடி உடைப்பு: மர்ம நபருக்கு வலை

தாம்பரம்,: தாம்பரம் அருகே அரசு குளிர்சாதன பேருந்து கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடையாறில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் அரசு குளிர் சாதான பேருந்து (த.எ.122) நேற்று காலை வழக்கம் போல பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மாகாலட்சுமி நகர் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்தை, டிரைவர் நிறுத்தியுள்ளார். அப்போது, பேருந்தின் பக்கவாட்டில் மது போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர்,  ஏன் தனக்கு வழிவிடவில்லை எனறு டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பின்னர் கீழே கிடந்த கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார்.இதுகுறித்து பேருந்து டிரைவர் மற்றும் நடத்துனர் ஆகியோர் சேலையூர் காவல் நிலையத்தில்  புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து, போதை ஆசாமியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் அவதிக்குள்ளாகினர். பின்னர், பயணிகள் அனைவரும் அதே பேருந்தில் அழைத்து செல்லப்பட்டனர்….

The post தாம்பரம் அருகே குளிர்சாதன பேருந்து கண்ணாடி உடைப்பு: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tanambaram ,TAMBARUM ,Thambaram ,Tanper ,
× RELATED தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்...