×

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்!

பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் வங்கதேச அணியை 120 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பெங்களூரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வங்கதேச அணியை 121 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.இந்தியா – வங்கதேச அணிகள் மோதிய பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி பெங்களூரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்து அசத்தியது.279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இதனால் 121 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.இதுவரை நடைபெற்ற 3 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான டி20 உலகக்கோப்பை போட்டியிலும் இந்திய பார்வை மாற்றுத்திறனாளிகள் அணியே வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் வரலாற்று சாதனை படைத்துள்ளது….

The post பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி 3வது முறையாக சாம்பியன்! appeared first on Dinakaran.

Tags : T20 Cricket World Cup for the Blind ,T20 Cricket World Cup ,Bangladesh ,T20 Cricket World Cup for ,Dinakaran ,
× RELATED வங்க தேச வணிக வளாகத்தில் தீ விபத்து: 45 பேர் பலி