×

திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜூக்கு கொரோனா

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏ செல்வராஜ் (65). திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். நேற்று இவருக்கு சளி மற்றும் இருமல் பாதிப்பு இருந்தது. உடனடியாக கொரோனா பரிசோதனை செய்தார். இதில், லேசான தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 2 நாட்கள் அரசு விழா, கட்சி விழாக்களில் தன்னுடன் பணியாற்றியவர்களை கொரோனா பரிசோதனை செய்யுமாறும்  செல்வராஜ் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளார்….

The post திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜூக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Tiruppur South Block ,MLA ,Selvarajuku Corona ,Tiruppur ,Tiruppur South Block Dizhagam ,Selvaraj ,Thiruppur ,Konga main Road ,
× RELATED ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு :...