×

பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? டெலி வாக்குப்பதிவு நடத்தும் கெஜ்ரிவால்

புதுடெல்லி: பஞ்சாப்பில் முதல்வர் வேட்பாளர் யார் என்று தீர்வு காணும் வகையில் டெலி வாக்குப்பதிவை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். பஞ்சாப்பில் ஆம்ஆத்மி கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்துள்ளது. பஞ்சாப் ஆம்ஆத்மி கட்சியில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காண 7074870748 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று அக்கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதனால் இந்த போன் லைன் ஸ்தம்பித்துள்ளது. இது குறித்து கெஜ்ரிவால் கூறியதாவது: ‘மக்கள் டெலி வாக்கெடுப்பின் அடிப்படையில் ஜன.17ம் தேதி ஆம்ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளரை அறிவிப்பேன். ஒரு கட்சி பொதுமக்களே தங்கள் முதலமைச்சரை தேர்ந்தெடுக்க அனுமதிப்பது இதுவே முதல் முறையாகும்.’ என்றார்….

The post பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம்ஆத்மி முதல்வர் வேட்பாளர் யார்? டெலி வாக்குப்பதிவு நடத்தும் கெஜ்ரிவால் appeared first on Dinakaran.

Tags : Aamadmy ,Punjab Assembly Election 2013 ,Kejriwal ,New Delhi ,Arvind Kejriwal ,Punjab ,Punjab Assembly Election ,
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வழக்கு; இடைக்கால...