×

இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி கேரள பெண்களிடம் ரூ.30 கோடி மோசடி: இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி நெல்லை போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார்

நெல்லை: திருவனந்தபுரம் ஆற்றிங்கல் அவினாச்சேரியைச் சேர்ந்த இந்திராபாய் அம்மா தலைமையில் கேரளாவைச் சேர்ந்த 40 பெண்கள் மற்றும் நெல்லை வக்கீல்கள் சங்க செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, வக்கீல்கள் சிதம்பரம், கணேஷ், ராஜா உள்ளிட்டோர் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனரிடம் அளித்த மனு: நெல்லை சந்திப்பு மதுரை ரோட்டில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர், எங்களிடம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு பணம் தருவதாகக் கூறி லட்சக்கணக்கான பணத்தை வசூலித்தார். கடந்த 2011 முதல் அந்நிறுவனம் சார்பில் நிர்வாக கூட்டங்கள் நடத்தப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பணம் வசூலிக்கப்பட்டது. பணம் கட்டும் போது ஐந்தரை ஆண்டுகள் கழித்து, 2 மடங்கு லாபத்தோடு, பணத்தை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் கடந்த 2017ல் அந்த நிறுவனத்தை வேறொரு நிறுவனமாக மாற்றி விட்டனர். நாங்கள் பணத்தை திரும்பக் கேட்ட போது, பணத்தை திரும்பச் செலுத்த முடியவில்லை என பதிலளிக்கின்றனர். எனவே எங்களை நம்ப வைத்து மோசடி செய்த அந்நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் நிர்வாக இயக்குநர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ரூ.5 கோடி, ரூ.3 கோடி, ரூ.50 லட்சம், ரூ.70 லட்சம் என நாங்கள் மொத்தம் ரூ.30 கோடியை இழந்து தவிக்கிறோம். எனவே அப்பணத்தை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி கேரள பெண்களிடம் ரூ.30 கோடி மோசடி: இரட்டிப்பு பணம் தருவதாகக்கூறி நெல்லை போலீஸ் கமிஷனர் ஆபீசில் புகார் appeared first on Dinakaran.

Tags : Kerala ,Paddy Police Commissioner's Office ,Nederla ,Nellai ,Kerla ,Indrabai ,Thiruvananthapuram ,Atirinkal Avinacheri ,Dinakaran ,
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை