×

புதுவை உள்ளாட்சி தேர்தல் உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு

புதுடெல்லி: புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தும் விவகாரத்தில் திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தேர்தல் ஆணையம் திரும்பப் பெற்றது. இதையடுத்து, இந்த அரசாணை ரத்து செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து புதுவை திமுக அமைப்பு செயலாளரும், மாநில எதிர்க்கட்சித் தலைவருமான சிவா, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் திமுக.வை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் வில்சன், நேற்று கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், ‘புதுவை மாநில உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவுக்கு எதிராக யாராவது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தால், எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம்,’ என கூறப்பட்டுள்ளது. …

The post புதுவை உள்ளாட்சி தேர்தல் உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு appeared first on Dinakaran.

Tags : Dizhagam Caviet ,Supreme Court of New ,Jersey Election ,New Delhi ,Caviet ,Supreme Court ,Puducherry ,New Indigenous Election Supreme Court ,Gashakam Caviet ,
× RELATED பிஏசிஎல் நிதி நிறுவனத்தில் ₹2 கோடி பணத்தை கட்டி 500 பேர் பாதிப்பு