×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு

* தாராபுரம்-எல்.முருகன் * துறைமுகம்-வினோஜ் பி.செல்வம் * ஆயிரம் விளக்கு-நடிகை குஷ்புசென்னை: அதிமுக கூட்டணியில் பாஜ இடம் பெற்றுள்ளது. அந்த கட்சிக்கு சட்டப்பேரவை தேர்தலில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம்விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி), கோயம்புத்தூர் தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் களம் காண்கிறது. இந்த தொகுதிகளில் யார் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பாக தமிழக பாஜ உயர்மட்ட குழு கூட்டத்தில் ஆலோசித்து பட்டியல் முடிவு செய்யப்பட்டது. இந்த பட்டியலை டெல்லியில் கட்சி மேலிட தலைவர்களிடம் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், கேசவ விநாயகம் ஆகியோர் அளித்தனர். அதை பாஜ மேலிடம் பரிசீலித்து வந்தது. இந்த நிலையில் 17 பேர் கொண்ட பட்டியலை கட்சியின் தேசிய பொது செயலாளர் அருண்சிங் நேற்று பிற்பகல் வெளியிட்டார். அதில் தாராபுரம் (தனி) தொகுதியில் தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார். ெசன்னை துறைமுகம் தொகுதியில் பாஜ இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் போட்டியிடுகிறார். சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு சுந்தர் போட்டியிடுகிறார். மேலும் திருவண்ணாமலை – தணிகைவேல்,  திருக்கோவிலூர்- கலிவரதன், மொடக்குறிச்சி – டாக்டர் சி.கே.சரஸ்வதி, கோவை தெற்கு- பாஜ மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், அரவக்குறிச்சி- முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, திட்டக்குடி-பெரியசாமி, திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.காரைக்குடியில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, மதுரை வடக்கு- டாக்டர் பி.சரவணன், விருதுநகர்- ஜி.பாண்டுரங்கன், ராமநாதபுரம்- டி.குப்புராம், திருநெல்வேலி- முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி, குளச்சல்-பி.ரமேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விளவன்கோடு, உதகமண்டலம், தளி ஆகிய தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் ெவளியிடப்படவில்லை. இந்த 3 தொகுதிகளுக்கான பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று தெரிகிறது….

The post தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 17 தொகுதிகளில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பட்டியல் வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil ,Nadu Legislature Elections ,Tarapuram-L Murugan ,Port ,Vinoj B. Wealth ,Kushbushushchennai ,Baja ,Tamil Nadu Legislation Elections ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...