×

தடையை மீறி மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்: ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி தீவிரம்

சென்னை: ஆவடி கோதண்டகிரி விரிவு பகுதியை சேர்ந்தவன் தனுஷ் (17). வீட்டின் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தான். நேற்று தன்னுடன் படித்து 11 மாணவர்களுடன் மெரினா கடற்கரையை சுற்றிபார்க்க வந்தான். பின்னர் உற்காக மிகுதியில் போலீசாரின் தடையை மீறி தனுஷ் தனது நண்ர்களுடன் கண்ணகி சிலை பின்புறம் உள்ள கடலில் இறங்கி குளித்தான். அப்போது திடீரென வந்த ராட்சத அலையில் தனுஷ் மற்றும் ஆகாஷ் ஆகியோர் சிக்கி கொண்டனர். அருகில் இருந்த மீனவர்கள் அலையில் சிக்கிய ஆகாஷை மீட்டனர். ஆனால் அதற்குள் தனுஷ் கடலில் மாயமானான். மீட்கப்பட்ட ஆகாஷை மீனவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.    இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கோதண்டராமன்(18), கிண்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று தன்னுடன் படித்து வரும் 5 நண்பர்களுடன் மெரினா கடற்கரையில் உள்ள குடிசைமாற்று வாரியம் அலுவலகம் எதிரே உள்ள கடலில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட ராட்சத அலையில் சிக்கி மாணவன் கோதண்டராமன் மாயமானார். அண்ணாசதுக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கடலோர பாதுகாப்பு படைஹெலிகாப்டர் உதவியுடன் மாணவர்களை தேடுகின்றனர். ’50 நாளில் 12 பேர்’கடந்த 50 நாட்களில் மெரினா கடலில் தடையை மீறி குளித்து 12 பேர் மாயமாகி உள்ளனர். அதில் 7 பேர் உடல் மட்டும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று இரண்டு மாணவர்கள் உட்பட 5 மாணவர்களின் உடல்கள் மீட்கப்படவில்லை….

The post தடையை மீறி மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 2 மாணவர்கள் மாயம்: ஹெலிகாப்டர் உதவியுடன் தேடும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Giant wave ,Marina ,Chennai ,Dhonush ,Awadi Gothandagiri Expansion Area ,giant wave of ,
× RELATED தமிழக கடலோரம்: இன்று மாலை வரை ராட்சத அலை எழும்