×

பாமக தலைவர் பக்கத்து மாவட்டத்தில் ஜொலிப்பாரா?

அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெற்றுள்ளது. கடந்த 10ம் தேதி பாமக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பென்னாகரம் தொகுதி பாமக வேட்பாளராக ஜி.கே. மணி அறிவிக்கப்பட்டுள்ளார். பாமக தலைவர் ஜி.கே. மணியின் சொந்த ஊர் மேட்டூரை அடுத்த கோவிந்தபாடியாகும். இவர் அக்கட்சியில் ஆரம்ப காலத்தில் இருந்தே கட்சிப்பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் 1996 மற்றும் 2001ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பென்னாகரம் தொகுதியிலிருந்தும், 2006ம் ஆண்டு மேட்டூர் சட்டமன்ற தொகுதியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜி.கே.மணி கடந்த முறை மேட்டூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, அந்த தொகுதியில் அவர் எந்த திட்டத்தை சரிவர நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. மேட்டூர் தொகுதி மக்கள் பழசை நினைத்து தனக்கு வாக்களிமாட்டார்கள் என்ற குற்ற உணர்வு அவரது மனதில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனால் எதிர்வரும் தேர்தல் அவர் தனது சொந்த தொகுதியில் நிற்காமல், பென்னாகரம் தொகுதிக்கு மாறிவிட்டார். பென்னாகரம் தொகுதியில் ஏற்கனவே அவர் இருமுறை வெற்றி பெற்றுள்ளதால், அந்த தொகுதி வாக்காளர் மத்தியில் தனக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது. அதனால் தனக்கு பென்னாகரம் தொகுதியை ஒதுக்க வேண்டும் என்று கட்சி நிறுவன தலைவரிடம் வலியுறுத்தினார். அதன்படி, அவருக்கு பென்னாகரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. சொந்த தொகுதி மக்களிடையே நன்மதிப்ைப இழந்த ஜி.கே. மணி பக்கத்து மாவட்டத்தில் எப்படி ஜொலிப்பார் என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்….

The post பாமக தலைவர் பக்கத்து மாவட்டத்தில் ஜொலிப்பாரா? appeared first on Dinakaran.

Tags : Bamaka ,AIADMK ,BAMKA ,Bennagaram ,Bama ,Dinakaran ,
× RELATED பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல்