×

தொகுதிக்கு தொடர்பில்லாதவர் வேட்பாளரா? குமரி மநீம தொண்டர்கள் புலம்பல்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில், மக்கள் நீதி மய்ய கட்சியின் வேட்பாளராக டாக்டர் சுபா சார்லஸ் என்பவரை, கமலஹாசன் அறிவித்துள்ளார். இவர் சென்னையில் உள்ளார். ஏற்கனவே கடந்த 2019  மக்களவை தேர்தலில் சென்னையை சேர்ந்த எபனேசரை வேட்பாளராக அறிவித்தார். அவர் நாகர்கோவில் லாட்ஜில் தங்கி இருந்து பிரசாரம் செய்தார். தேர்தல் முடிந்த பின் அவர் எங்கு சென்றார் என்பதே தெரிய வில்லை. இப்போது டாக்டர் சுபா சார்லஸ் என்பவரை அறிவித்துள்ளார். குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்தால், எளிதில் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க முடியும். மாவட்டத்தில் இருப்பவரை அறிவித்தால், தினமும் நிர்வாகிகளுடனும், தொண்டர்களுடனும் தொடர்பில் இருப்பார். வெளியூர்காரர்களை அறிவித்தால் நிர்வாகிகள், தொண்டர்கள் எப்படி? அவர்களுடன் இணக்கமாக  செயல்பட முடியும்.  வெற்றி பெற போவதில்லை என்றாலும் கூட, மக்களிடம் நெருங்கினால் தான் மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு கட்டமைப்பை குமரி மாவட்டத்தில் உருவாக்க முடியும். தொடர்பு கொள்ள முடியாத நபர்களை வேட்பாளர்களாக அறிவிப்பது வேதனையாக உள்ளது என்பது குமரி மாவட்ட மக்கள் நீதி மய்ய தொண்டர்களின் கவலை ஆகும்….

The post தொகுதிக்கு தொடர்பில்லாதவர் வேட்பாளரா? குமரி மநீம தொண்டர்கள் புலம்பல் appeared first on Dinakaran.

Tags : Kumari Maniema Volunteers ,Kamalahasan ,Dr. ,Zuba Charles ,People's Justice Maiya Party ,Kannyakumari Popular ,Constituency ,Inter-Elections ,Kumari Maniema ,Volunteers Layering ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!