×

மகளிர் டென்னிஸ்: 2வது சுற்றில் நவோமி ஒசாகா வெற்றி

டோக்கியோ: ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் டென்னிஸ் 2ம் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா வெற்றி பெற்று, 3வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடந்த 2வது சுற்றுப் போட்டியில் நவோமி ஒசாகாவும், ஸ்விட்சர்லாந்து வீராங்கனை விக்டோரிஜா கொலுபிக்கும் மோதினர். மகளிர் ஒற்றையர் டென்னிஸ் உலக தரவரிசையில் ஒசாகா தற்போது 2ம் இடத்தில் உள்ளார். விக்டோரியா 48ம் இடத்தில் உள்ளார். இப்போட்டியில் விக்டோரியா எதிர்ப்பே இல்லாமல், ஒசாகாவிடம் சரணடைந்து விட்டார். 6-3, 6-2 என நேர் செட்களில் இப்போட்டியில் ஒசாகா வெற்றி பெற்று, 3ம் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்….

The post மகளிர் டென்னிஸ்: 2வது சுற்றில் நவோமி ஒசாகா வெற்றி appeared first on Dinakaran.

Tags : Naomi Osaka ,Tokyo ,Japan ,Olympic women's ,Dinakaran ,
× RELATED ஜப்பான் நாட்டுடன் இணைந்து வெள்ளத்...