×

போக்குவரத்துத்துறையின் உத்தரவை திரும்ப பெற கோரி இன்று முதல் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 18.8.2022 அன்று நடைபெற்ற போக்குவரத்து ஆணையரின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி போக்குவரத்து ஆணையர் ஓர் கடிதத்தை அவரது கீழ்நிலை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளார். இதில் ‘குறிப்பிட்ட 2 நாட்கள் மட்டுமே ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் மாணவர்களுக்கு ஓட்டுநர் உரிமத் தேர்வு நடத்தப்படும் எனவும், மீதம் உள்ள 3 நாட்கள் பொதுமக்கள் மட்டுமே தேர்வுக்கு வர வேண்டும்’ எனவும் கூறப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் நடைமுறையில் ஆய்வாளர் பற்றாக்குறையினால் பொதுமக்களாகிய எங்கள் மாணவர்கள் தேர்வு நடத்தப்படாமல் திருப்பி அனுப்பப்படுகின்றனர். முறையான பயிற்சி பெற்று, பாதுகாப்பாக வாகனத்தை இயக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களும் பொதுமக்கள் தானே. பிறகு ஏன் இந்த பாகுபாடு. ஆணையரின் இந்த உத்தரவினால் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளுக்கும், இங்கு பயிலும் பொதுமக்களுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஆணையரின் கவனத்திற்கும் அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் நோக்கத்தோடு இக்கூட்டமைப்பைச் சார்ந்த உறுப்பினர்கள் அனைவரும் இன்று முதல் தங்கள் மாணவர்களுக்கான பழகுனர் உரிமம் தேர்வு மற்றும் ஒட்டுனர் உரிம தேர்வுகளை காலவரையின்றி புறக்கணிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது….

The post போக்குவரத்துத்துறையின் உத்தரவை திரும்ப பெற கோரி இன்று முதல் வேலைநிறுத்தம்: ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Driving School Owners Federation ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்