×

சென்னையில் 50 நாட்களில் விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.6.50 கோடி அபராதம் வசூல்: 10 கால் சென்டர்கள் மூலம் போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை

சென்னை: சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக நிலுவையில் இருந்த 2,73,284 வழக்குகளில் புதிதாக தொடங்கப்பட்ட 10 கால் சென்டர்கள் மூலம் கடந்த 50 நாட்களாக நிலுவையில் இருந்த அபராத தொகை ரூ.6.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.சென்னை மாநகர காவல்துறையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் அபராதம் வசூலிக்கும் வகையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் 10 கால் சென்டர்களை கடந்த ஏப்ரல் மாதம் 11ம் தேதி தொடங்கி வைத்தார். மேலும், அண்ணாநகர் பகுதியில் ‘ஏஎன்பிஆர்’ கேமரா மையங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை கையாள்வதற்கான மேலும், இரண்டு தனித்தனி அழைப்புகள் மையங்கள் அமைக்கப்பட்டன.அந்த வகையில், கடந்த ஏப்ரல் 11ம் தேதி முதல் மே 5ம் தேதி வரை அதாவது புதிய கால் சென்டர் தொடங்கப்பட்டு 50 நாட்களில் சென்னை முழுவதும் அமைக்கப்பட்ட 10 போக்குவரத்து கால் சென்டர்கள் மூலம் வழக்கு புதிவு செய்யப்பட்ட வாகன ஓட்டிகளுக்கு அழைப்புகள் செய்து சாலை விதிகளை மீறுபவர்களுக்கு நிலுவையில் உள்ள விதி மீறல்கள் குறித்து தெரிவித்ததுடன், அபராத தொகையை ஒரு வாரத்தில் செலுத்தும்படியும் அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, கடந்த 2019 மார்ச் மாதம் முதல் பல்வேறு போக்குவரத்து விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகள் மீது பதியப்பட்ட 1,27,066 வழக்குகளில் 1 கோடியை 93 லட்சத்து 75 ஆயிரத்து 970 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.  மேலும் குடிபோதை மற்றும் பிற போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பாக கடந்த 50 நாட்களில் புதிதாக தொடங்கப்பட்ட 10 கால் சென்டர்கள் மூலம் 2,73,284 வழக்குகளில் அபராதமாக 6 கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 770 ரூபாய் போக்குவரத்து போலீசார் கால் சென்டர் உதவியுடன் வசூலித்துள்ளனர்….

The post சென்னையில் 50 நாட்களில் விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் ரூ.6.50 கோடி அபராதம் வசூல்: 10 கால் சென்டர்கள் மூலம் போக்குவரத்து போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்