×

காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் வைகாசி விசாக பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் வைகாசி விசாக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது. காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில் வைகாசி விசாக பெருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான விழா நேற்று துவங்கி வரும் 14ம் தேதி வரை நடக்கவுள்ளது. நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியதை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைத்தொடர்ந்து ஆடு வாகனத்தில் முருகப்பெருமான் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்தார். இன்று சூரிய பிரபை அன்ன வாகனம், நாளை தேவேந்திர மயில்வாகனம், கேடயம் மங்களகிரி என ஒவ்வொரு நாளும் விழா நிகழ்வுகள் நடைபெறும். அதேபோல், 9ம் தேதி சுப்பிரமணியசுவாமி அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெறும். அதேபோல், விழாவின் முக்கிய நிகழ்வான, 13ம் தேதி வள்ளி கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் கடைசி நாளான 14ம் தேதி கந்தப் பொடி வசந்தம் எனும் கேடயம் மங்களகிரி போன்ற பல்வேறு கோலங்களில் முருகர் அலங்கரிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா நடைபெறும். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் தியாகராஜன் செய்துள்ளனர். …

The post காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோயில் வைகாசி விசாக பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Kumarakottam Murugan Temple Vaikasi Visakha Festival ,Kanchipuram ,Kanchipuram Kumarakottam Subramania ,Swami… ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...