லண்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டெஸ்டில், இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 141 ரன்னுக்கு சுருண்டது.லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த நியூசிலாந்து அணி, அனுபவ வேகம் ஆண்டர்சன் மற்றும் அறிமுக வேகம் மேத்யூ பாட்ஸ் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 132 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (40 ஓவர்). கிராண்ட்ஹோம் 42* ரன், டிம் சவுத்தீ 26 ரன், பிளண்டெல், போல்ட் தலா 14 ரன், டேரில் மிட்செல் 13 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.இங்கிலாந்து பந்துவீச்சில் ஆண்டர்சன், பாட்ஸ் தலா 4 விக்கெட், ஸ்டூவர்ட் பிராடு, பென் ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 2வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 141 ரன்னுக்கு முதல் இன்னிங்சை இழந்தது. லீஸ் 25, கிராவ்லி 43, ஜோ ரூட் 11 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். உதிரியாகக் கிடைத்த 22 ரன் தான், இங்கிலாந்து இன்னிங்சில் 3வது அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது குறிப்பிடத்தக்கது.நியூசிலாந்து பந்துவீச்சில் டிம் சவுத்தீ 4, போல்ட் 3, ஜேமிசன் 2, கிராண்ட்ஹோம் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 9 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 56 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து மீண்டும் தடுமாறியது. வில் யங் 1, கேப்டன் வில்லியம்சன் 15, டாம் லாதம் 14, டிவோன் கான்வே 13 ரன்னில் பெவிலியன் திரும்பினர். இந்த நிலையில், டேரில் மிட்செல் – டாம் பிளண்டெல் இணைந்து உறுதியுடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். …
The post சவுத்தீ, போல்ட் அசத்தல் 141 ரன்னில் சுருண்டது இங்கிலாந்து appeared first on Dinakaran.