×

மலபார் கோல்டு டைமண்ட்ஸில் நிருத்யாஞ்சலி கலெக்ஷன்கள் அறிமுகம்

சென்னை: மலபார் கோல்டு  டைமண்ட்ஸ் புதிய நகை கலெக்ஷனான நிருத்யாஞ்சலியை இந்தியாவின் நடனங்களுக்கு அர்பணிப்பு செலுத்தும் வகையில் நாடு முழுவதும் உள்ள அதன் ஷோரூம்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தி.நகர் கிளையில் பத்மபூஷன் வி.பி.தனஞ்ஜெயன் மற்றும் மதி சாந்தா தனஞ்ஜெயன்   ஆகியோர்  இதனை அறிமுகப்படுத்தினர். இதில் ஸ்ரீமதி ஷீலா உன்னிகிருஷ்ணன், நிறுவனர் ஸ்ரீதேவி ஆகியோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து, நிருத்தியாலயா நாட்டிய பள்ளி மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.நிருத்யாஞ்சலி என்பது நயமான இந்திய பாரம்பரிய நடன வடிவங்களின் அழகை தூய்மையான தங்கத்தில் நேர்த்தியான செய்யப்பட்ட நகை கலெக்சன் ஆகும். ஒவ்வொன்றும் 100% பிஐஎஸ் ஹால்மார்க் தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்ட கைவினை பொருளாக உள்ளது.இதுகுறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது கூறுகையில், `நிருத்யாஞ்சலி தொகுப்பின் மூலம் எங்கள் பிராண்டுடன் தொடர்புடைய பாரம்பரிய மற்றும் கலை மதிப்புகளை முன்னிலைப்படுத்தவும், இந்தியாவின் பாரம்பரிய நடனங்களுக்கு மரியாதை செலுத்தவும் விரும்புகிறோம்’ என்றார்….

The post மலபார் கோல்டு டைமண்ட்ஸில் நிருத்யாஞ்சலி கலெக்ஷன்கள் அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Niruthyanjali ,Malabar Gold Diamonds ,Chennai ,India ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் இருந்து...