×

நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி: ட்வீட்டரில் வானதி சீனிவாசன் பதில்

சென்னை: நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என தமிழக தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அவரது டிவீட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.6-ம் தேதி நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுகவுடன், பாஜக கூட்டணி அமைத்து களம் காண உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று 20 தொகுதிகளில் 17 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டது. இதில் தமிழக தேசிய பாஜக தலைவர் வானதி சீனிவாசனுக்கு கோயம்புத்தூர் தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே ட்வீட்டரில் ஒருவர்  வலிமை அப்டேட் எப்போது கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த வானதி சீனிவாசன் நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி என்று பதிலளித்தார். முன்னதாக, அஜித் நடிப்பில் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை படம் குறித்தான அப்டேட்டை அஜித் ரசிகர்கள் தொடர்ந்து சமூகவலைதளங்களில் கேட்டு வந்தனர். …

The post நான் வெற்றி பெற்ற உடன் நிச்சயமாக வலிமை பட அப்டேட் கிடைக்கும் தம்பி: ட்வீட்டரில் வானதி சீனிவாசன் பதில் appeared first on Dinakaran.

Tags : Sky Scenivasan ,Chennai ,Sky ,Chiniwasan ,tweeter ,
× RELATED மேலாளர் அறைக்கு வந்த மர்ம தொலைபேசி...